ஹேப்பி நியூஸ்! கடைசி நோயாளியும் குணமடைந்தார்.. கொரோனா இல்லாத மாநிலமாக மாறிய புதுச்சேரி
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா பரவ தொடங்கியது. அதன் உலகின் எல்லா நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அலறவிட்டன.
கொரோனா பரவல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்னும் கூட பல நாடுகளில் வைரசை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அதேபோல கொரோனா வைரசும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது.

இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 2020இல் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. முதல் அலையில் நாட்டில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட, பின்னர் டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓமிக்ரான் கொரோனாவால் 3ஆம் அலையும் நாட்டில் ஏற்பட்டது. இதனால் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

புத்தாண்டு கொண்டாட்டம்
புதுவையிலும் கொரோனா பாதிப்பு தமிழகத்தைப் போலவே இருந்து வந்தது. கடந்த டிசம்பரில் அங்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. அப்போது ஓமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து இருந்தன. இருந்த போதிலும், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கு வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்தது.

புதுச்சேரி
இதையடுத்து புதுவையில் மீண்டும் சில கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் மற்ற மாநிலங்களைப் போலவே ஓமிக்ரான் அலை புதுச்சேரியிலும் விரைவாகக் குறையத் தொடங்கியது. ஜனவரி இறுதி முதலே அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. கடந்த சில வாரங்களாகவே புதுவையில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழாகவே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

கொரோனா இல்லாத மாநிலம்
அதேபோல கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களும், குணமடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 222 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கூட வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேபோல வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்தார். இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கொரோனா இல்லாத மாநிலமாகப் புதுச்சேரி மாறியுள்ளது. மேலும், புதுச்சேரியில் 16.36 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications