எதுவுமே செய்யவில்லையே.. மத்திய அரசு மீது புதுச்சேரி பாஜக கூட்டணி முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி, மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது சட்டசபையில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். புதுச்சேரிக்கு மத்திய பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை என விரக்தியுடன் பேசியது விவாதத்தை கிளப்பியது
புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சுயேட்சை எம்.எல்.ஏ.சிவசங்கர் பேசுகையில், மாநிலங்களின் உள் கட்டமைப்புக்கு மத்திய அரசு ரூ1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் ஒதுக்கி உள்ளது; இதனைப் பெறுவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்ததா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இந்த திட்டத்தை அறிவித்தது முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் அந்த திட்ட வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்துகிறோம். ஆனால் மாநிலங்களுக்குதான் இந்த திட்டம்; யூனியன் பிரதேசத்துக்கு இல்லை என்கிறது மத்திய அரசு என்றார்.
அப்போது குறுக்கிட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கர், மத்திய அரசானது ஜம்மு- லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதே என சுட்டிக்காட்ட, "நாங்களும் கேட்கத்தான் செய்கிறோம்.. எதுவுமே செய்யவில்லையே" என விரக்தியில் பதிலளித்தார் முதல்வர் ரங்கசாமி.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான சிவா, புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்தையும் செய்கிறது என்கின்றனர் பாஜகவினர்.. ஆனால் முதல்வர் ரங்கசாமியோ.. மத்திய அரசு எதனையுமே செய்யவில்லை என வருத்தப்படுகிறார் என்றார். இதனை மறுத்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கு சாத்தியமான அனைத்தையும் மத்திய அரசு தந்து கொண்டே இருக்கிறது என்றார்.
இந்த விவாதங்களில் குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ. நாஜிம், பூனைக்குட்டி இப்போதுதான் வெளியே வந்துள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி நலனுக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு தந்த பதிலையே சட்டசபையில் தெரிவித்துள்ளேன். கொடுக்கும் இட த்தில் அவர்கள் இருக்கிறார்கள்; நாம் கேட்கும் இடத்தில் இருக்கிறோம் என்று மீண்டும் விரக்தியை வெளிப்படுத்தினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications