புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் களம், இப்போது தமிழகத்தை போலவே பரபரப்பை தந்து வருகிறது.. குறிப்பாக, ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான "தேசிய ஜனநாயக கூட்டணி" உடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் சமீபத்திய மௌனமும், சேலம் பயணமும் பல அதிரடி மாற்றங்களுக்கான அரசியல் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது??
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நீண்ட நாட்களாகவே இழுபறி நீடித்து வந்தது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ரங்கசாமி தரப்பு 16 இடங்களையும், பாஜக 14 இடங்களையும் பிரித்துக் கொள்வதாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால், சமீபத்தில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையிலான "லட்சிய ஜனநாயக கட்சி"யை கூட்டணியில் இணைக்க பாஜக காட்டிய அதீத ஆர்வம், ரங்கசாமியை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி விட்டதாகவே தெரிகிறது.
புதுச்சேரி ரங்கசாமி
தன்னுடைய மீறி, புதிய கட்சியை உள்ளே கொண்டுவந்து சீட் ஒதுக்க முயன்ற பாஜகவின் தன்னிச்சையான போக்கை ரங்கசாமி ஏற்கவில்லை.. இதன் விளைவாக, பாஜக தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட முக்கிய அரசியல் அழைப்புகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை அவர் முற்றிலுமாக புறக்கணிக்க துவங்கினார்.-
பொதுவாக கூட்டணி ஆட்சியில் ஒரு முதலமைச்சர் இத்தகைய அழைப்புகளை தவிர்ப்பது அரிது என்றாலும், ரங்கசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்ய, மவுனத்தையே ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.
குருநாதர் கோவிலில் வேட்பாளர் பட்டியல்?
கூட்டணி விவகாரம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ரங்கசாமி திடீரென சேலத்தில் உள்ள தனது குருநாதர் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்றிருப்பதும் தற்செயலானதாக தெரியவில்லை. அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, "அவங்க பேசிட்டு இருக்காங்க... நாங்க எங்க நிலைப்பாட்டை சொல்லிட்டோம்" என மிகச் சுருக்கமாக பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
அரசியல் வட்டாரங்களில் கசியும் தகவல்படி, ரங்கசாமி ஏற்கனவே 30 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகவும், அந்தப் பட்டியலை தனது குருநாதர் பாதத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு, புதுச்சேரி திரும்பியதும் "தனித்துப் போட்டி" என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் பிடியிலிருந்து விலகி, தனது தனித்துவத்தை நிலைநாட்ட ரங்கசாமி கிட்டத்தட் முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.
ரங்கசாமி - விஜய் கூட்டணி?
இந்த சூழலில், தவெக தலைவர் நடிகர் விஜய்க்கும் ரங்கசாமிக்கும் இடையிலான உறவு குறித்துப் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன... மூத்த தலைவர் ரங்கசாமி மீது விஜய்க்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு.. தன்னுடைய அரசியல் ரோல்மாடலாகவும் ரங்கசாமியைத்தான் விஜய் வரித்து கொண்டுள்ளார்..
அதனால்தான், புதுச்சேரியில் தவெக தனது அரசியல் கணக்கைத் தொடங்க துடிப்பதாக தெரிகிறது.. ரங்கசாமி பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டால், அவருக்கு ஆதரவாகவோ அல்லது அவரோடு கைகோர்க்கவோ விஜய் முன்வரலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
எனினும் இப்போதே புதுச்சேரியில் உள்ள தவெக நிர்வாகிகள் ஏற்கனவே களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒருவேளை ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், அது தவெக-வுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்களாம்..
அதுமட்டுமல்ல, ரங்கசாமியும் விஜய்யும் இணைந்தால், அது புதுச்சேரியில் ஒரு புதிய 'மூன்றாவது அணி' போன்ற வலிமையான சக்தியாக மாறும். 2026 தேர்தலில் எந்த ஒரு கட்சியுடனாவது கூட்டணி வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள தவெக-வுக்கு, ரங்கசாமி ஒரு பாதுகாப்பான மற்றும் செல்வாக்குமிக்க கூட்டணி தலைவராகவும் தெரிகிறார்.
எதிர்பார்ப்புகளும் மாற்றங்களும்
ரங்கசாமி எடுத்துள்ள இந்த மவுனமான நிலைப்பாடு, அவர் தனி அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க போகிறார் என்பதையே உறுதிப்படுத்துகிறது. பாஜக தரப்பு இந்த விவகாரத்தை மிகக் கவனமாகக் கையாண்டு வந்தாலும், ரங்கசாமியின் பிடிவாதம் அவர்களை திணறடித்து கொண்டேயிருக்கிறது..
அந்தவகையில், ரங்கசாமி தனித்துப் போட்டியா அல்லது விஜய்யுடன் கைகோர்ப்பா? என தெரியவில்லை.. அவரது இந்த அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் பாஜக என்ன முடிவெடுக்க போகிறது என்றும் தெரியவில்லை.. இதுவரை ஒரு கட்சியை கூட கூட்டணியில் சேர்க்க முடியாத நிலையில், என்ஆர் காங்கிரஸையாவது, தன்னுடன் கூட்டணியாக தவெக இணையுமா என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications