2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. "அந்த" மாதிரி பாட்டுக்கள்தான்.. திடீரென வெடித்த சண்டை

புதுச்சேரி பெண் தோழிகளின் மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 2 பேரும் ஓவர் நெருக்கம்.. "அந்த" மாதிரி பாட்டுக்களுக்குதான் இவர்கள் டான்ஸ் ஆடுவார்கள்.. நடுவீட்டில் நின்று கொண்டு, ஆட்டம் போடும் இவர்கள் ஸ்நாக் வீடியோ சோஷியல் மீடியாவில் ரொம்பவும் பிரபலம்.. இப்போது இந்ததோழிகளுக்குள் தகராறு வெடித்து, மோசடி குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் வெடித்து வருகிறார்கள்!

புதுச்சேரி வேல்ராம்பட்டு மறைமலை நகரைச் சேர்ந்தவர் மேகவாணி... இவரது கணவர் பெயர் பாலசுப்பிரமணியன்.. கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி ஒடிசா ஜெயிலில் உள்ளார்.

வேல்ராம்பட்டு துலுக்காணத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜவதனி... இவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.. இவரும் மேகவாணியும் ரொம்ப குளோஸ் ஃபிரண்ட்ஸ்.. 2 வருஷமாகவே டிக்டாக் போன்ற ஸ்நாக் வீடியோ மூலம் பழகி நெருக்கமான நட்பில் உள்ளவர்கள்.

புகார்

புகார்

இவர்களுக்குள் என்ன ஆனதோ தெரியவில்லை.. கடந்த 7ம் தேதி, மேகவாணி மீது ராஜவதனி முதலியார்பேட்டை ஸ்டேஷனில் ஒரு புகார் தந்தார்.. அதில் தான் மேகவாணியிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை திருப்பி தந்து விட்டதாகவும், மீதி பணத்தைக் கேட்டு மேகவாணி தன்னுடைய வீட்டிற்கு வந்து தகராறு செய்வதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

முதலியார்பேட்டை

முதலியார்பேட்டை

இந்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், மேகவாணி தெற்கு போலீசில் ஒரு புகார் அளித்தார்.. அதில், "தன்னிடம் நெருங்கி பழகிய ராஜவதனி 75,000 ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை மருத்துவ செலவிற்காக வாங்கியதாகவும் அதை திரும்ப கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தனது வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.

விசாரணை

விசாரணை

இதனிடையே ராஜவதனி முதுநிலை ஸ்டேஷனில் இன்னொரு புகார் தந்தார்.. அதில், "தன் மீது வீண்பழி சுமத்தும் மேகவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இப்படி 2 பேருமே மாறி மாறி புகார்களை தந்து கொண்டே இருக்கிறார்களாம்.. இதில் எந்த பக்கம் விசாரித்து முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை என்கிறார்கள் போலீசார்.. ஒன்றாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தவர்கள் இப்படி சண்டை போட்டு கொண்டு புகார்களை தொடுத்து கொண்டு இருப்பதால், விசாரணை தீவிரமாக நடக்கிறது என்றும் சொல்கின்றனர்.

ரசிகை

ரசிகை

இதில் ராஜவதனி சூப்பராக டான்ஸ் ஆடுவாராம்.. அந்த ஆட்டத்தை பார்த்துதான், மேகவாணியே அவரது ரசிகையாகி மாறி, கடைசியில் தோழியாகவும் மாறினாராம். கணவர் ஜெயிலில் இருப்பதால், தனிமையில் இருந்த மேகவாணிக்கு, ராஜவதனியின் நட்பு இனிப்பாக இனித்தது. 3 மாசம் இவர்கள் சுற்றி திரியாத இடமே இல்லையாம்.. அந்த சமயத்தில்தான், ராஜவதனி, மேகவாணியிடம் கடன் பெற்றுள்ளார்.

களங்கம்

களங்கம்

அந்த பணத்தை திருப்பி கேட்டதால்தான் இப்போது பரஸ்பர குற்றச்சாட்டு இவர்களுக்குள் வெடித்து வருவது பெரிய பிரச்சனையாகி வருகிறது. இதில் ராஜவதனி பற்றி சோஷியல் மீடியாவில் மேகவாணி அவதூறு பரப்புகிறாராம்.. அதனால், தன்னுடைய மானத்திற்கு சிறு களங்கம் வந்தாலும்கூட உயிரையே விட்டுவிடுவேன் என்கிறார் ராஜவதனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+