புதுச்சேரி லாட்ஜில் ரூம் போட்ட ஜோடி.. படுக்கையறையில் "விருந்தாளி".. கோர்ட்டுக்கு ஓடிய நபர்.. என்னவாம்
புதுச்சேரி: லாட்ஜில் ரூம் போட்டுள்ளது அந்த இளம்ஜோடி.. கடைசியில் பார்த்தால், இவ்வளவு பெரிய அமர்க்களமாகி, கோர்ட் வரை விவகாரம் செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை.. என்ன நடந்தது புதுச்சேரியில்?
சமீப காலமாகவே ரகசிய கேமராக்கள் விவகாரம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர். இந்த கேமராக்களை வைத்தபிறகுதான், எத்தனையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது.. பல வழக்குகளுக்கு தடயங்களை அள்ளித்தரும் கருவியாக இந்த சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டிருக்கின்றன.

கேமராக்கள்: ஆனால், பொது இடங்களில், சிசிடிவி அல்லாத ரகசிய கேமராக்களை வைத்து சில விஷமிகள், கேடுகெட்ட செயல்களில் இறங்கிவிடுகிறார்கள்.. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், பெண் ஊழியர்களுக்கான பாத்ரூமில்கூட, பேனா கேமராவை வைத்து படம் பிடித்ததாக, அறநிலையத்துறை அதிகாரி மீதே புகார் எழுந்த சம்பவமும் இந்த தமிழ்நாட்டில் உண்டு.
கோயில் குளம் பகுதிகளிலேயே இந்த லட்சணம் என்றால், ஹோட்டல்களிலும், லாட்ஜ்களிலும், ரிசார்ட்களிலும், குடும்பத்துடன் தங்க நேரும் நபர்களின் நிலைமை என்னாவது? சில லாட்ஜ்களில் தெரிந்தே இந்த தவறுகள் ஊக்கப்படுத்தப்படுகிறது என்றாலும், இதில் பாதிக்கப்படுவது என்னவோ, ஒன்றுமறியாத இளம்பெண்களும், பெண் குழந்தைகளும்தான்.
வார இறுதி நாட்கள்: இதோ யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், கடந்த மாதம் ஒரு கொடுமை நடந்தது. ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த காதல் ஜோடி இங்கு வந்துள்ளது. பஸ் ஸ்டாண்டு பக்கத்திலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். 2வது நாள் இரவு, இருவரும் தூங்க போகும்போது, படுக்கைக்கு பக்கத்தில் இருந்த பிளக் பாயிண்ட் துளையிலிருந்து, லைட் போல மின்னி மின்னி எரிந்தது..
சிறிய வெளிச்சம் வருவதை பார்த்து, அந்த இளைஞர் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அந்த பிளக் பாயிண்ட் துளைக்குள், சிறிய எல்.இ.டி விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்தார்..
ரகசிய கேமரா: பிறகு ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து வந்து, அதை பிரித்து பார்த்துள்ளார். அப்போதுதான் அதற்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து மிரண்டு போனார்.. அந்த ரூமில் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் அந்த கேமராவில் பதிவாகி கொண்டிருந்ததை பார்த்து இந்த ஜோடி மிரண்டுவிட்டது.
அந்த ரகசிய கேமராவை கழற்றிக் கொண்டுபோய், அந்த ஹோட்டலின் ஊழியர்களிடம் காட்டியதற்கு, "எங்களுக்கும், அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த விஷயத்தை பெரிசுப்படுத்தாதீங்க என்று லாட்ஜ் நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டதாம். ஒருகட்டத்தில் இளைஞருக்கு மிரட்டலும் விடுத்துள்ளதாக தெரிகிறது.

லாட்ஜ் : இதற்கு பிறகு அந்த இளைஞர் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நடந்த சம்பவத்தை சொல்லி, புகார் தந்தார்.. பிறகு, அந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 2 பேர் கைதானார்கள்.. சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கும் நகராட்சி நிர்வாகிகள் சீல் வைத்தார்கள்
இதனிடையே, முன்ஜாமின் கோரி, சம்பந்தப்பட்ட ஆனந்து, ஆபிரகாம் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இரு தரப்பிலும், வாதங்களும் நடந்து முடிந்த நிலையில், நீதிபதி டீக்காராமன் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில் சொன்னதாவது:
நீதிபதி உத்தரவு: "மனுதாரர்கள் 2 பேருமே ஓட்டல் நிர்வாகத்தில் உள்ளவர்கள். ரகசிய கேமராக்களை பொருத்துவதில், மற்றவர்களுடன் சேர்ந்து, இவர்களும் செயல்பட்டுள்ளனர். புகார் அளித்தவர் சத்தம் போட்டதுமே, 2 பேரும் கீழே விரைந்து வந்து, போட்டோக்களையும், வீடியோ பதிவுகளையும் லேப்டாப்பில் இருந்து நீக்கி உள்ளனர். இப்போது புலனாய்வு நடக்கிறது.
புதுச்சேரி, ஒரு சுற்றுலா மையம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அங்கு நடந்தால், சுற்றுலாவில் பாதிப்பு ஏற்படும். அதனால், மனுதாரர்களுக்கு முன்ஜாமின் வழங்க விரும்பவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..!!!












Click it and Unblock the Notifications