போலாம் ரைட்... மக்களோடு, மக்களாக பஸ்சில் பயணித்த துணை நிலை கவர்னர் தமிழிசை... எதுக்கு தெரியுமா!
புதுவை: புதுவையில் சாலை வசதிகள் சரியில்லை என்று மக்கள் புகார் அளித்திருந்த நிலையில் அதனை ஆய்வு செய்வதற்காக மக்களோடு, மக்களாக பஸ்ஸில் பயணம் செய்து அசத்தியுள்ளார் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.
சாலைகளின் தரம் குறித்து பஸ் ஓட்டுனரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பேருந்து சேவைகளை முறைப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அவர்.
Recommended Video

புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பை ஏற்றது முதல் தமிழிசை பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுவையில் துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கிரண்பேடி மிகவும் தொல்லை கொடுக்கிறார் என்று குடியரசுத் தலைவரிடம் நேரடியாக வற்புறுத்தினார் நாராயணசாமி. இதனை தொடர்ந்து கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை துணை நிலை கவர்னராக கூடுதல் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதிரடி அறிவிப்புகள்
இதற்கிடையே தமிழிசை பொறுப்பேற்றதும், புதுவையில் அரசியல் குழப்பம் வெடித்தது. புதுவையை ஆட்சி செய்த காங்கிரசில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் விலகியதால், பெரும்பான்மையை வேறு வழியின்றி முதல்வர் நாரயணசாமியும் பதவியை ராஜினாமா செய்தார். புதுவை அரசு கவிழ்ந்ததால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பை ஏற்றது முதல் தமிழிசை பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு
புதுவை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை என்றிருந்த நிலையை மாற்றி, வாரத்திற்கு 3 முட்டை வழங்க அதிரடியாக உத்தரவிட்டார் தமிழிசை. மேலும், மக்களை பாடாய்படுத்தி வரும் பெட்ரோல், டீசல் விலையை சிறிதளவு குறைக்கும் பொருட்டு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைத்தார்.இந்த நிலையில் சாலை வசதிகள் சரியில்லை என்று மக்கள் புகார் கூறியிருந்த நிலையில் அதனை ஆய்வு செய்வதற்காக மக்களோடு, மக்களாக பஸ்ஸில் பயணம் செய்து அசத்தியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

பஸசில் பயணித்த தமிழிசை
புதுவையில் சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்று பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை நேரிடையாக அறிய முடிவு செய்தார். தமிழிசை. இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட தமிழிசை, புதுச்சேரி-கடலுர் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அங்கு வந்த தனியார் பஸ்ஸில் ஏறி மக்களோடு மக்களாக அமர்ந்து தவளக்குப்பம் வரை பயணம் செய்தார்.

மக்களிடம் குறைகளை கேட்டார்
ஒரு கவர்னர் தங்களுடன் பயணம் செய்வது கண்டு பஸ்ஸில் இருந்த மக்கள் வியப்படைந்தனர். அந்த பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் தமிழிசை. மேலும் சாலைகளின் தரம் குறித்து பஸ் ஓட்டுனரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பேருந்து சேவைகளை முறைப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications