பணத்திற்காக பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை.. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மகன் கைது
புதுவை: புதுச்சேரியில் பணத்திற்காக பெற்ற தாயையே கழுத்தை இறுக்கி கொலை செய்து நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர். இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் நேருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ராணி (50). இவர்களுக்கு சரளா (30) என்ற மகளும், அய்யனார் (27) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ராணி தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து அனுப்பிய பணத்தில் அவரது மகன் அய்யனார் புதியதாக வீடு கட்டியும், நெல் அறுவடை இயந்திரம் தொழிலும் நடத்தி வந்துள்ளார்.

அய்யனார்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதுச்சேரி திரும்பிய ராணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தான் சம்பாதித்து மகனிடம் கொடுத்த பணத்தை மகள் சரளாவுக்கும் ராணி திருப்பி கேட்டதாக தெரிகிறது. இதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்தார்.

மர்மச் சாவு
இதனால் தாய், மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் ராணி வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை
கொரோனா பரிசோதனை முடிவு வந்தவுடன் ராணியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கழுத்தை இறுக்கியும், தலையில் அடித்தும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ராணியின் மகள் புகார்
அப்போது, தனது தாய் ராணியை தம்பி அய்யனார் கொலை செய்து இருக்கலாம் என போலீசில் சரளா தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அய்யனாரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அய்யனாரிடம் தாய் ராணி வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்தை கேட்டுள்ளார்.

தாய் இறப்பு
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகறாரில் மகன் அய்யனார் தனது தாயை தள்ளி விட்டதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கினார். பின்னர் வீட்டில் இருந்த மின்சார வயரால் தாயின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும் தாய் இறந்ததை தெரியாதது போல் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்துள்ளார்.

பரபரப்பு
ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் தாய் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமானதை தொடர்ந்து போலீசார் அய்யனாரை கைது செய்தனர். பணத்திற்காக பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications