புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போலீஸ் ஸ்டேசனில் புகார்.. புதுச்சேரியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மாநில முதல்வர் நாராணயசாமிக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் மோதல் போக்கு உள்ளது. புதுச்சேரியில் முதல்வராக நாரயணசாமி பதவியேற்றது முதல் இந்த மோதல் இருந்து வருகிறது.

puducherry police get complaint against governor kiran bedi

ஆளுநர் கிரண்பேடி தனியாகவும், முதல்வர் நாராயணசாமி தனியாகவும் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து பேசிவருகின்றனர். இதனால் யாருடைய உத்தரவை செயல்படுத்துவது என்ற குழப்பத்தில் அவ்வப்போது புதுச்சேரி அதிகாரிகள் தவிப்பது உண்டு.

இதனிடையே மத்திய அரசு புதுச்சேரியில் அரசின் நடவடிகையில் தலையிட்டு, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இருப்பதாக 2017ம் ஆண்டு அறிவிப்பு ஆணையும் வெளியிட்டது.இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வரின் அதிகாரத்திலும், அரசின் அன்றாட அலுவல்களிலும் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுககு நேரடியாக உத்தரவிடவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் நடவடிக்கையில் தலையிடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்து வெளியிட்ட அறிவிப்பாணையையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மழைமேகத்தால் இந்திய விமானங்கள் தப்பியது... மோடி சொன்னது உண்மை.. விமானப்படை தளபதி ஒப்புதல் மழைமேகத்தால் இந்திய விமானங்கள் தப்பியது... மோடி சொன்னது உண்மை.. விமானப்படை தளபதி ஒப்புதல்

இந்நிலையில் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் குறைதீர்ப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகிறார். இதன் மூலம் மக்களின் குறைகளை கேட்க ஆளுநரோ அதிகாரிகளோ, தனியார் ஊடகங்களையோ வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை கிரண்பேடி மீறிவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

English summary
puducherry police get complaint against governor kiran bedi, she broke court order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X