Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 ஆயிரம் பேர்தான் வரணும்.. விஜய் பொதுக்கூட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த புதுவை அரசு

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. விஜய் பொதுக்கூட்டத்திற்கு வரும் நேரம் சரியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் கூட்டத்திற்கு வர அனுமதி மறுத்துள்ளது. புதுவையில் வரும் 9 ஆம் தேதி விஜய்யின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

தவெக தலைவரும் நடிகருமான விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை தொடங்கினார். நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். விஜய் பங்கேற்ற கூட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர்.

puducherry-police-restrict-vijay-public-meeting-to-5-000-people-with-special-conditions

கரூர் கூட்ட நெரிசல்

3-வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியானது தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள்ளரங்கு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார். காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

புதுவையில் ரோடு ஷோ

சேலத்தில் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் கார்த்திகை தீபம், பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், வேறு தேதியை கேட்குமாறு போலீஸ் அறிவுறுத்தல் விடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். இதையடுத்து புதுவையில் ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி கோரினார்.

ஆனால் புதுவை அரசு மறுப்பு தெரிவித்தது. புஸ்சி ஆனந்த், புதுவை காவல்துறை அதிகாரிகளை 3 முறை சந்தித்து அனுமதி பெற முயற்சித்தார். ஆனாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், பொதுக்கூட்டம் நடத்தினால் அனுமதி அளிக்கலாம் என்று புதுவை காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

புதுவையில் பொதுக்கூட்டம்

இதையடுத்து, விஜய்யின் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுவை உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

துறைமுக வளாகத்தில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றி மண் கொட்டி சமப்படுத்தினால்தான் கூட்டத்தை நடத்த முடியும் என்பதால் அதற்கான பணிகளில் தவெகவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக வளாகத்தின் முழு பகுதியையும் வழங்க முடியாது.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி

ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்ள பகுதியை மட்டுமே பொதுக்கூட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதனை கருத்தில் கொண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் வரக்கூடாது.. 5000 பேர் வரை மட்டுமே அனுமதி என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நிபந்தனைகள் என்னென்ன?

வரும் 9 ஆம் தேதி புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை மனதில் வைத்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்றிடக் கூடாது என்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* விஜய் பொதுக்கூட்டத்திற்கு வரும் நேரம் சரியாக தெரிவிக்கப்பட வேண்டும்.
* கூட்டத்திற்கு 5,000 பேர் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
* கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி கிடையாது. என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை புதுவை போலீசார் விதித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+