காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை?
புதுச்சேரி: புதுவை சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் "நேயம் மக்கள் கழகம்" இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த 2 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உருளையன்பேட்டை தொகுதியில் மரிய பிரான்சிஸ், தட்டாஞ்சாவடி தொகுதியில் எம்.பன்னீர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் தவெக கூட்டணியில் இணையுமாறு விஜய் பல்வேறு ஆஃபர்களை கொடுத்திருந்த நிலையில் யாருமே கூட்டணிக்கு வரவில்லை. அவர் என்டிஏ கூட்டணிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
தவெக தனித்து போட்டியிடுவதாக இஃப்தார் நோன்பில் விஜய் அறிவித்துவிட்டார். மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே தவெகவுடன் கூட்டணியில் இருந்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி விலகி, திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது.
-
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications