ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி.. ஆழ்கடலில் கிரிக்கெட்.. அசத்திய ஸ்கூபா டைவிங் வீரர்கள் !

Subscribe to Oneindia Tamil

புதுவை: ஐ.பி.எல்லில் வென்ற சென்னை Super kings அணியை வாழ்த்தி புதுச்சேரியில் ஆழ்கடலில் நீச்சல் வீரர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2021 கிரிக்கெட் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டி குறித்து எம்.எஸ். தோனி கூறுகையில் நான் இன்னும் நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை. தென் ஆப்பிரிக்கா, துபாய் என எங்கு விளையாடினாலும் ஆதரவு கொடுத்து வரும் சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி.

மீண்டும் ரசிகர்கள்

மீண்டும் ரசிகர்கள்

அடுத்த ஆண்டு சென்னையில் மீண்டும் ரசிகர்கள் முன் விளையாடுவோம் என தெரிவித்தார். இதை கேட்ட ரசிகர்கள் கை தட்டி உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில் ஐபிஎல் வெற்றியை பாராட்டி புதுவையில் ஸ்கூபா டைவிங் வீரர் ஒருவர் ஆழ்கடலில் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாடிய படம் வைரலாகி வருகிறது.

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் temple adventure என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் அரவிந்த். உள்நாட்டவரும் வெளிநாட்டவரும் சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐ.பி.எல் T-20 போட்டியில் சென்னை Super kings அணி இறுதி போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Recommended Video

    CSK வெற்றியை கொண்டாடிய நடிகர் SilambarasanTR Viral images | Oneindia Tamil
    வாழ்த்து

    வாழ்த்து

    இந்நிலையில் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி ஆழ்கடலுக்குள் கிரிக்கெட் விளையாட்டு நடத்தப்பட்டது. சென்னை நீலாங்கரை கடற்பகுதியில் 12 அடி ஆழத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் நீச்சல் வீரர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடை

    சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடை

    ஆழ்கடலுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடை அணிந்து பாதுகாப்புக் கவசங்களுடன் பேட்டிங், பௌலிங், ஸ்டெம்பிங் என வீரர்கள் விளையாடி சென்னை Superkings அணி வெற்றி பெற்றதற்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+