ஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த அழகுக்கலை நிபுணர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவரது உடலை வாங்க மூன்று மனைவிகளும் போட்டிபோட்டு கொண்டு வந்ததால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர் பிரபல அழகுக்கலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனது அத்தை மகள் சத்யாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தர்மபுரியிலிருந்து சிங்காரவேலு தேனிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு தனலட்சுமி என்ற பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டு முதல் திருமணத்தை மறைத்து தனலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். தனலட்சுமிக்கு சிங்காரவேலு மூலம் 2 குழந்தைகள் உள்ளன.

3வது திருமணம்

3வது திருமணம்

மீண்டும் தேனியிலிருந்து கடந்த ஆண்டு மதுரைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டபோது அங்கு காவ்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு முதல் இரண்டு திருமணத்தை மறைத்து காவ்யாவையும் சிங்காரவேலு மூன்றாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.

சிங்காரவேலு இடமாற்றம்

சிங்காரவேலு இடமாற்றம்

சில மாதங்களுக்கு முன்னர் சிங்காரவேலு புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து புதுச்சேரி கிளைக்கு வந்த சிங்காரவேலு ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

காவ்யா மறுப்பு

காவ்யா மறுப்பு

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தன்னுடன் குடும்பம் நடத்த மதுரையில் உள்ள காவ்யாவை புதுச்சேரிக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் முறைப்படி திருமணத்தை பதிவு செய்தால்தான் குடும்பம் நடத்த வருவேன் என காவ்யா தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சக ஊழியர் அதிர்ச்சி

சக ஊழியர் அதிர்ச்சி

இதில் காவ்யா தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த சிங்காரவேலு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சிங்கார வேலுவுடன் பணி செய்யும் சக ஊழியரான இளையமுருகன், சிங்காரவேலுவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தபோது சிங்காரவேலு தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளயைம் போலீசில் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து ரெட்டியார்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏமாற்றியது அம்பலம்

ஏமாற்றியது அம்பலம்


இதனையடுத்து, அவரது செல்போனில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்ட போலீசார் சிங்காரவேலு இறந்ததை தெரிவித்துள்ளனர். அப்போது 3 மனைவிகளும் அலறிடித்துக்கொண்டு ஓடிவந்தனர். 3 பேரும் தான் தான் மனைவி என கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனயைடுத்தே காதல் மன்னனாக சிங்காரவேலு வலம் வந்திருந்தது தெரியவந்ததையடுத்து, மூன்று மனைவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு, முதல் மனைவியான சத்யாவிடம் சிங்காரவேலுவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. 3 பெண்களை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+