புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்தது!
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக பாகூர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களில் 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 2 பேர் ஜிப்மர் மருத்தவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104 ஆகவும் உள்ளது.

ஏற்கனவே 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 6 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் தற்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட 5 பேரில் 3 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

மேலும் ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர். மற்றொருவர் கோரிமேடு காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவலரின் பெண் ஆவார். இதுவரை 7,793 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 7,647 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 14 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications