ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? தமிழிசை தந்த விளக்கம்..தேர்தலில் போட்டியிட தயார்தான் போலயே!
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
நாடு முழவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதுவரை சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதிமுகவும், பாஜகவும் இன்னும் கூட்டணியையே உறுதி செய்யவில்லை. தமிழக அரசியல் சூழல் இவ்வாறு இருக்கையில், தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்தார்.
லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி, இவரை தேர்தலில் போட்டியிட கூறியதாகவும், எனவேதான் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவருக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது பெரும் கேள்வியாக எழுந்திருக்கிறது.
பாஜவுக்கு தென் மாநிலங்களில் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஜெயித்துவிடலாம் என கடந்த முறை தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட்டார். ஆனால், தோல்வியடைந்தார். இந்த முறை இந்த தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. கன்னியாகுமரிக்கு பொன்.ராதாரகிருஷ்ணன் துண்டு போட்டு வைத்திருக்கிறார். எனவே, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடுவார் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தன்னுடைய ராஜினாமா குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "தீவிரமான மக்கள் பணியை நேரடியாக செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்தபோது மக்களுக்கான ஆளுநராகவே இருந்திருக்கிறேன். ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுவபம் அதிகரித்திருக்கிறது. இந்த பதவி என்னுடைய அரசியல் பணியை தடுக்கவில்லை. ராஜினாமா ஏற்றுக்கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications