திருப்பரங்குன்றம் தீர்ப்பை கொண்டாடிய பாஜகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம் - பரபரப்பு
புதுச்சேரி: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்று புதுச்சேரியில் கொண்டாட்டம் நடத்திய பாஜகவினரிடம் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம ரவிக்குமாா் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. சட்ட ஒழுங்குப் பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அரசு தரப்பில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மேல்முறையீட்டு மனு, இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை எதிர்க்கும் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
அப்போது மேல்முறையீட்டு மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை பாஜகவினர், இந்து அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று அவர்கள் சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அப்போது பட்டாசின் தீப்பொறி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீது தெறித்தது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் பாஜகவினரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து தவறை உணர்ந்த பாஜகவினர் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாசு வெடித்த பாஜகவினரிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications