புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசாங்கத்தை யார் நேசிக்கிறார்களோ.. அவர்களை தேச துரோகி என்கிறார்கள்.. ராகுல் காந்தி ஆவேசம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: அரசாங்கத்தை யார் நேசிக்கிறார்களோ அவர்களை தேச துரோகி என கூறுகின்றனர். பிரதமர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் இந்தியாவில் உள்ள அனைவரும் நினைக்க வேண்டும் என எண்ணுகிறார்.என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, புதுச்சேரி மாநிலம் தனித்துவமான மாநிலம். உலகின் பல நாடுகளில் ஒரே மதம் ஒரே மொழி உள்ள நிலையில் இந்தியாவில் தான் பல மொழி பல மதத்தில் விளங்கி வருகிறது. நாட்டில் உள்ள பல கலாச்சாரங்கள் ஒரே ஆன்மாவாக எழுந்து நிற்பதாக வெளிநாட்டினர் கூறுவர்

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருக்கலாம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலத்திற்கு உள்ள முக்கியத்துவம் புதுவைக்கு கொடுக்கப்படுகிறது. அதுக்கு ஒரு காரணம் உள்ளது. இந்திய மக்களை நேசிப்பது போல் புதுச்சேரியையும் நேசிக்கிறோம்.

பிரதமர் செய்யவில்லை

பிரதமர் செய்யவில்லை

இந்தியாவில் தான் புதுச்சேரி இருக்கிறது என்றால் இந்தியாவும் புதுச்சேரியில் தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். தன்னை ஒரு பிரதமராக நினைக்காமல் சக்கரவர்த்தியாக நினைக்கிறார். புதுவைக்காக எதையும் பிரதமர் செய்யவில்லை. வாக்களிக்கும் போது பிரதமரின் செயல்பாட்டை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தையும் அவர் அவமதிப்பார்.

கவலைப்படவில்லை

கவலைப்படவில்லை

கடந்த 5 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட அனுமதிக்கவில்லை. இந்த தேசத்தின் பிரதமர் மக்களின் வாக்கை தனிப்பட்ட முறையில் அவமதித்தார். துணைநிலை ஆளுநர் வாயிலாக பிரதமர் கூறி வந்தார். அவருக்கு ஒரே ஒரு விஷயம்தான் தேவை தேசத்தின் பிரதமராக இருக்க வேண்டும். உங்களை பற்றி கவலைப்படவில்லை.

ஆளுநர்

ஆளுநர்

எங்களுக்கு நீங்கள் தருகிற வாக்கு உங்களின் தேவைகளை செயல்வடிவமாக்கப்படும். இந்த யுத்தம் எதற்காக என்றால் உரிமைகளை பெறுவதற்காக நடத்தப்படுகிறது. ஆளுநராக இருந்தவர் புதுச்சேரியில் பிறந்தவர் இல்லை, வளரவில்லை ஆனால் மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை கொடுத்தது யார். சிபிஐ தங்களது கையில் இருக்கிறது என்பதாலா அல்லது மத்தியில் ஆட்சி இருப்பதினாலா.

பிரதமர் ஆட்சி

பிரதமர் ஆட்சி

புதுச்சேரி எனது சொத்து என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். 5 அல்லது 6 பேருக்கு தான் பிரதமர் ஆட்சியை நடத்துகிறார். அவர்கள் எதை கேட்கிறார்களோ அதை உடனே செய்து கொடுக்கிறார். பணமதிப்பிழப்பால் யாராவது பயன்பெற்றது உண்டா சொல்லுங்கள். நீங்கள் வங்கியில் செலுத்திய பணம் அந்த 5 அல்லது 6 நபர்களுக்குத்தான் சென்றுள்ளது. லட்சக்கணக்கான கோடி கடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜ.எஸ்.டி சட்டமும் அந்த சில நபர்களுக்கு தான் சென்றுள்ளது" இவ்வாறு கூறினார்.

English summary
Those who love the government call them traitors. Former Congress leader Rahul Gandhi has accused the Prime Minister of thinking that everyone in India should think what he has in mind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X