‛‛சீமானே எங்களை தான் திட்றாரு’’.. அப்படினா பாஜக வளர்ந்து இருக்குனு அர்த்தம்.. கலகல வானதி சீனிவாசன்
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் சீமான் கூட பாஜக குறித்து பேசுகிறார் என்றும், பாஜக அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில், ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. பாஜகவை பொறுத்த அளவில், 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

பாஜக சார்பில் அண்ணாமலை கோவையிலும், தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நீலகிரி (தனி) எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், வேலூரில் ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன், பெரம்பலூரில் டி.ஆர்.பாரிவேந்தரும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல திருவள்ளூரில் பொன்.வி.பாலகணபதி, வட சென்னையில் ஆர்.சி.பால்கனகராஜ், திருவண்ணாமலையில் ஏ.அஸ்வத்தாமன், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன், கரூரில் வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) பி.கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சாவூரில் எம்.முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன், மதுரையில் பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) பி.ஜான் பாண்டியன், புதுச்சேரி தொகுதியில் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
எனவே வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "தமிழகத்தில் சீமான் கூட பாஜக குறித்து பேசுகிறார் என்றும், பாஜக அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "பாஜகவை திட்டினால்தான் ஓட்டு வாங்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் எங்கே பாஜக? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் இப்போது, முதல்வர், அமைச்சர் உயதநிதி, சீமான் கூட பாஜகவைதான் திட்டிக்கொண்ருக்கிறார். இந்த தேர்தலில் 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும். எல்லா தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு எங்களுக்குதான் இருக்கிறது.
பாஜக மட்டும்தான் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்து வருகிறது. வேறு யாரும் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதில்லை. வேறு எந்த கட்சியாவது பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்ட சொல்லுங்கள் பார்ப்போம். ஸ்டாலின் பிரதமராகிறாராமா? உதயநிதி ஸ்டாலின் பிரதமராகிறாராமா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறதா? கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள், அங்கு கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் எதிரெதிராக போட்டியிடுகின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications