“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்.9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கட்சியின் தலைமை மீது சரமாரியாக விமர்சனங்களை அடுக்கியிருக்கின்றனர்.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு அரசியல் களத்தில் நுழைந்தவர்தான் விஜய். ஆனால், அக்கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களம் இறங்க, ரூ.5 கோடி பேரம் பேசியிருப்பது, தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
வழக்கமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஒரே நாளில்தான் தேர்தல் வரும். ஆனால், இந்த முறை புதுச்சேரிக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 16ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனுத்தாக்கல் நிறைவடைகிறது. கூட்டணியை பொறுத்தவரை, திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், என்ஆர் காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கயிருக்கின்றன.
ரூ.5 கோடி பேரம்
தவெக தனித்துதான் போட்டியிடுகிறது. எனவே போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்ய கட்சி தலைமை கூறியிருந்தது. இதனை தொடர்ந்து, மனு தாக்கல் செய்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் கட்சி தலைமை தரப்பில் வேட்பாளருக்கு தலா ரூ.5 கோடி கேட்டு பேரம் பேசப்பட்டதாக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
விஜய் மீது கேள்வி
பணத்தை கொடுத்துதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய் சொல்லியிருக்கிறாரா? என நிர்வாகிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கின்றனர். நேற்று வரை பாஜகவில் நிர்வாகியாக இருந்த நபருக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பணம் இல்லாமல், கட்சியை முழுமையாக நம்பி வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் நிர்வாகிகள் ஏமாற்றம் தெரிவித்திருக்கின்றனர்.
எப்படி சமாளிக்கப்போகிறார் விஜய்?
ஊழல், லஞ்சம் ஒழிப்பு, நேர்மையான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி என்று பேசும் விஜய், தன் கட்சிக்குள் நடப்பதை பற்றி கவலைப்படமாட்டாரா? தலையிடமாட்டாரா? இதில் கூட அவர் தலையிடவில்லை எனில், ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முறைகேடுகளில் எப்படி தலையிடுவார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
-
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும்












Click it and Unblock the Notifications