என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்!
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். அதேபோல் திமுக - காங்கிரஸ் கூட்டணி குழம்பி போன கூட்டணி என்று கூறிய விஜய், தவெக யாருடனும் ஒட்டி உறவாடவில்லை என்றும், மக்களை நம்பி தனியாக களத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கிறது. இதனையொட்டி தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இருக்கும் தட்டாஞ்சாவடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியில் பகல் 1 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க விஜய்க்கு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப முன் கூட்டியே விஜய் பிரச்சார இடத்தை எட்டினார்.

அதற்கு முன்பாக தமிழக - புதுச்சேரி எல்லையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் விஜய் பேசுகையில், புதுச்சேரியில் தவெக முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. இங்கே களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் நபர்களை தான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன். புதுச்சேரியில் 2 கூட்டணி இருக்கிறது. அதனால் நாங்கள் வந்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி உங்களுக்கு வரும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் இங்கு பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டுமல்ல, அவரின் கட்சித் தலைவரையே எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து சிரித்தது. திமுகவும் இங்கே 3 முறை ஆட்சியில் இருந்தது. இப்போது இந்த இரு கட்சிகளும் பெயருக்கு தான் கூட்டணியில் இருக்கிறார்கள்.
ஆனால் சில தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் குழப்பமான கூட்டணியாக உள்ளது. அதேபோல் இங்கும் குழம்பி போன கூட்டணியாகவே தொடர்கிறது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இருக்கிறது. அது கூடி சேர்ந்த கூட்டணி இல்லை.. அது சோர்ந்துபோன கூட்டணி.. இதனிடையே தவெகவை வைத்து வேறு அரசியல் செய்தார்கள்.
இந்த கூட்டணி புதுச்சேரிக்கு ஏன் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை? தவெக ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து பெற முழுமையாக முயற்சிப்போம். இந்த 2 கூட்டணிக்கும் வாக்களிப்பது வேஸ்ட். புதுச்சேரிக்கு நல்லாட்சி வேண்டும். தவெகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.. இந்த விஜய் உங்களுக்கு துணையாக இருப்பேன். தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமையும். புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையணும் என்று தெரிவித்துள்ளார்.
-
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம்












Click it and Unblock the Notifications