ஆட்சி கவிழ்ப்பு முதல் ஜனாதிபதி ஆட்சி வரை புதுவையில் இந்த "4-இல்" எதுவேனாலும் நடக்கலாம்
புதுவை: புதுவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முதல் ஜனாதிபதி ஆட்சி வரை எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
புதுவையில் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ்- திமுக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது. மொத்தம் 30 இடங்களில் காங்கிரஸும் திமுகவும் இணைந்து 17 இடங்களில் வென்றது.
இந்த நிலையில் நாராயணசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டதால் அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடையவுள்ளது.

நிகழ வாய்ப்பு
இந்த நிலையில் இது போன்ற பரபரப்பு ஏன் என பார்க்கும் போது அரசியல் ரீதியாக பார்த்தோமேயானால் டெல்லியில் இரு தேசிய கட்சிகளுக்கிடையேயான ஒரு பிரச்சினை டெல்லியிலிருந்து சிறிய யூனியன் பிரதேசமான புதுவைக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பரந்து விரிந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரத்தை வைத்து புதுவையில் என்னவெலாம் நிகழ வாய்ப்புள்ளது என்பதை அறிவோம்.

பெரும்பான்மை
இன்று புதுவை சட்டசபையில் தங்களுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று சட்டசபை கூடி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமியின் அரசு கவிழும். காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு 12 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது.

பெரும்பான்மை
காங்கிரஸ் கட்சிக்கான பெரும்பான்மை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரியும் போதிலும் முதல்வர் பதவி விலக மறுத்துவிட்டார். அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார். பெரும்பான்மை இல்லை என தெரிந்தும் நாராயணசாமி இவ்வாறு ஏன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செல்கிறார் எனில், இன்னும் ஓரிரு மாதங்களில் புதுவை சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை தந்திரம் செய்து பாஜக கவிழ்த்தது என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி கடந்த தேர்தலை போல் வரும் தேர்தலிலும் புதுவையில் பாஜக தலைதூக்காமல் இருக்க செய்ய வேண்டும் என்பதால் இந்த சூழ்நிலையை நாராயணசாமி சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் என்றே தெரிகிறது.

சதி
அடுத்தபடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்க்க சதி செய்வதாக குற்றம்சாட்டி என் ஆர் காங்கிரஸ் கட்சியின் இரண்டு அல்லது 3 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யலாம். அவ்வாறு தகுதிநீக்கம் செய்தால் சட்டசபையின் பெரும்பான்மை பலம் குறையும். தற்போதைய நம்பர் கேமில் எதிர்க்கட்சிகளின் பலம் விளிம்பில் இருக்கின்றன. எனவே தகுதி நீக்கம் செய்யும் ஆயுதத்தை சபாநாயகர் எடுத்தார் என்றால் எதிர்க்கட்சிகளின் பலம் குறைய நிறைய வாய்ப்புள்ளது.

பாஜகவின் சதி
அடுத்தபடியாக பாஜக வழியில் சென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முடிவை ஆளும் காங்கிரஸ் எடுக்கும் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கிடைத்த தகவலின்படி கடைசி நேரத்தில் அதிமுக கூடாரத்தில் இருக்கும் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்ற ஒரு யோசனையில் முதல்வர் நாராயணசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது பாஜகவின் தந்திரம். முள்ளை முள்ளால் எடுப்பது போல் தந்திரத்தை சதியை பாஜகவின் சதியால் வெல்வது என்பதுதான்.

குடியரசு தலைவர் ஆட்சி
கடைசி ஆப்ஷன் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி நிகழ் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் ஆட்சியை கலைக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் எடுக்கக் கூடும் என்றே தெரிகிறது. புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு தமிழிசை பரிந்துரைக்க முடியும். புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு முடிவுக்கு வர இயலாததாலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரை செய்யலாம் என்று தெரிகிறது.

4 விஷயங்கள்
புதுவை சட்டசபை தேர்தல் நடைபெறும் வரை புதுவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்த முடிவுக்கு பெரும்பாலானோர் வரவேற்பளிக்கிறார்கள். புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதாவது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தால் மாநிலத்தின் நிதி நிலையில் சற்று ஏற்றம் பெற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அது போல் அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே புதுவையில் இன்றைய தினம் இந்த 4 விஷயங்கள்தான் நடைபெறும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications