திமுக அரசின் முடிவை வரவேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாலை.. அரசுக்கு வைத்த புதுக்கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பள்ளிகளை திறக்ககும் தமிழக அரசின் முடிவினை வரவேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

    திமுக அரசின் முடிவை வரவேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாலை.. அரசுக்கு வைத்த புதுக்கோரிக்கை

    புதுச்சேரி பாஜக தலைமை அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை, புதுச்சேரியில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி எந்த திட்டத்தையும் நிறைவேற்றமல் மத்திய அரசையே குற்றம் சாட்டி வந்தார்.

    ஆனால் இப்போது புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பாஜகவிற்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய பாஜகவாக புதுச்சேரி பாஜக இருக்கிறது. புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வராது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் பாஜக ஆட்சி

    தமிழகத்தில் பாஜக ஆட்சி

    தாமரை மலராது என்று கூறியதை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். தற்போது 6 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 எம்எல்ஏக்களுடன் ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மக்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவைப் பார்த்துக் கற்றுக் கொண்டுள்ளோம். வருகின்ற காலம் தமிழகத்தில் கூட அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்றார்.

    அண்ணாமலை வரவேற்பு

    அண்ணாமலை வரவேற்பு

    தமிழகத்தில் பள்ளி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை பாஜக வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்துவிட்டது. 3-வது அலையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை.

    குழந்தைகள் தவிப்பு

    குழந்தைகள் தவிப்பு

    நிச்சயமாகப் பள்ளிகளைத் திறக்க வேண்டும். ஏனென்றால், அசாதாரணமான சூழ்நிலையில் குழந்தைகளை 2 ஆண்டுகள் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளோம். இதனால் எல்லாக் குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையில் பெற்றோர், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. அதே நேரத்தில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இப்போதுதான் அவர்களுக்கும் தடுப்பூசி வந்துள்ளது. இருப்பினும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளிகள் திறப்பை பாஜக வரவேற்கிறது

    வித்தியாசமான அறிவிப்பு

    வித்தியாசமான அறிவிப்பு

    விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனி மனிதனாக விநாயகரை வழிபடலாம், சிலையை கரைத்துக் கொள்ளலாம். ஆனால், கூட்டமாகச் செல்ல அனுமதியில்லை என்று கூறி உள்ளது. கடந்த ஆண்டும் இதே மாதிரிதான் இருந்தது.

    வாழ்க்கை முறை

    வாழ்க்கை முறை

    விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள். காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.

    பாஜக ஏற்காது

    பாஜக ஏற்காது

    டாஸ்மாக்கைத் திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. வருகிற காலங்களில் முதல்வரைச் சந்தித்து முறையிடுவதா? அல்லது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து எப்படி இதனை எடுத்துச் செல்வது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். கட்சி நிர்வாகியின் பெயரில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதற்கு ஒரு குழு அமைத்துள்ளோம். அந்தக் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+