புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும்.. போட்டுத்தாக்கிய ஸ்டாலின்.. அப்போ காங்கிரஸ்? நாராயணசாமி பதில்!
புதுச்சேரி : "புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பார்" என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரி மாநில திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் உதயமாகும் எனத் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்டாலினின் பேச்சு பற்றி நாராயணசாமி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி திமுக நிர்வாகி
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி மாநில திமுக அவைத் தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமணம் விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தனர். இந்த திருமண விழாவில், திமுக உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி
இந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்துப் பார்க்கவில்லை. அதனால் தான் எம்.பி தேர்தலில் 40 தொகுதி என்று குறிப்பிடுகிறோம். தமிழகத்தில் மலர்ந்துள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். அப்படி பட்ட ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தேவை. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆசைதான் என்றார்.

திமுக ஆட்சிக்கு வரும்
மேலும் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான். ஆனால், ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுவையில் ஆட்சி நடைபெறுகின்றது. புதுச்சேரி திமுக எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் இங்கு திமுக ஆட்சி வரவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே புதுச்சேரியில் திமுக பல முறை ஆட்சியில் இருந்தவர்கள் தான். நிச்சயமாக சொல்கிறேன் திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் எனத் தெரிவித்தார்.

கூட்டணி
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, அதை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் சரி, நாம் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். யாருடன் கூட்டணி, எப்படிப்பட்ட கூட்டணி என்பதையெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். ஆனால் வெற்றிக்கு இப்போதே அச்சாரமாக கட்சி பணிகளை ஆற்ற வேண்டும் என ஸ்டாலின் பேசினார்.

கட்சியினரை ஊக்கப்படுத்த
காங்கிரஸ் உடன் திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், புதுச்சேரியில் திமுக ஆட்சி ஆமையும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுபற்றிப் பேசியுள்ள புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடரும்
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் எனக் கூறியதில் எந்தத் தவறும் இல்லை, கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பார். தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications