இளம்பெண்ணை சீரழித்த காதலன் உட்பட 5 பேர் ... புதுச்சேரி அருகே கொடூரம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அருகே வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளம்பெண்ணை காதலன் உட்பட அவனது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து ரயில் தண்டவாளத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது அவரது காதலன் அருள்ஜோதி என்பவர் விநாயகபுரம் ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு அப்பெண்ணை சிறிது நேரம் தனியாக அமர்ந்து பேசலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

woman molested by 5 member gang in Puducherry

அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு மறைந்திருந்த அருள்ஜோதியின் நண்பர்கள் 4 பேர் அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த இளம்பெண்னை ரயில்வே தண்டவாளத்தில் தரதரவென இழுத்து சென்றதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயமடைந்து மயக்க நிலையிலிருந்த இளம்பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

woman molested by 5 member gang in Puducherry

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண்ணை தண்டவாளத்தில் வைத்து காதலன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman molested by 5 member gang in Puducherry

இதனிடையே இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளம்பெண்னுக்கு அரசு வேலை உள்ளிட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பெண்ணின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிச்சேரியை சேர்ந்த ஐயனார் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+