அதிமுக மாஜி அமைச்சர் வெங்கடாசலம் நினைவுநாள்! தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டிய அமைச்சர் மெய்யநாதன்!
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சரின் வெங்கடசாலத்தின் 13வது ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அமைச்சர் மெய்யநாதன்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், முத்தரையர் சமுதாயத்தின் முன்னணி பிரமுகருமான வெங்கடாசலம் கடந்த 2010ஆம் ஆண்டு ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ளது தனது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 1996 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் வெங்கடாசலம். அந்தளவுக்கு ஆலங்குடி சுற்றுவட்டார மக்கள் மத்தியில் வெங்கடாசலம் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார்.

இதனால் தான் 2001ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெங்கடாசலத்தை நிறுத்திய ஜெயலலிதா அவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார். அந்தப் பதவியில் அவர் இரண்டு மாத காலம் மட்டுமே இருந்தார். இதனிடையே கட்சிகளை கடந்து முத்தரையர் சமுதாய மக்கள் மத்தியில் வெங்கடாசலத்துக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. ஆலங்குடி, பேராவூரணி உள்ளிட்ட முத்தரையர் சமுதாயத்தினர் அடர்த்தியாக வாழும் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்ந்தவர் வெங்கடாசலம்.
ஆண்டுதோறும் அக்டோபர் 7ஆம் தேதி இவரது நினைவுநாளன்று ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த முத்தரையர் சமுதாயத்தினர் கட்சி பேதங்களை கடந்து நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்த வகையில் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படத்திற்கு தீபாராதனை காட்டி தேங்காய் உடைத்து வணங்கிய மெய்யநாதனை முத்தரையர் சமுதாய இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதேபோல் முத்தரையர் சமுதாய முன்னணி பிரமுகர்கள் பலரும் மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவுநாள் குருபூஜையில் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றதற்கு அவர் சார்ந்த முத்தரையர் சமுதாய மக்களின் வலிமையான வாக்குவங்கியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications