7.5% இட ஒதுக்கீடு + யூடியூப் வீடியோ.. முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவன்
புதுக்கோட்டை: அரசுப் பள்ளியில் படித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்த்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நாடு முழுக்க கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தர வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேநேரம் மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்து கல்வியில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் முறை தமிழ்நாட்டில் இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி படித்த கணிசமான மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைக்கிறது.
நீட்: இதற்கிடையே அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் யூடியூப்பை பார்த்தே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவரின் அப்பா மற்றும் அம்மா என இருவருமே கூலித் தொழிலாளிகள் தான். இந்த மாணவரும் அரசுப் பள்ளியில் படித்தவர் தான்.. புத்தகம் கூட வாங்கி படிக்கக் கூட முடியாத அளவுக்கு ஏழ்மை நிலையில், இருந்த இந்த மாணவர் எடுத்த கடும் முயற்சியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கோச்சிங் சென்டரில் எல்லாம் சேரும் அளவுக்கு இவரிடம் காசு இல்லை. இதனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களை பார்த்து இவர் நீர் தேர்வுக்கு ரெடியாகியுள்ளார்.. இதற்காக அவர் 11ஆம் வகுப்பில் இருந்தே தயாராகி வந்துள்ளார். இப்போது நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் இவருக்குத் தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது.
மருத்துவம்: இதன் மூலம் எப்படியாவது தனது மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற அவரது தாய்- தந்தை கனவை இவர் நிறைவேற்றியுள்ளார். இவருக்கு இப்போது நீலகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இது பற்றி அந்த மாணவனிடம் பேசுகையில், "நான் பயாலஜி மட்டும் படித்து வெற்றி பெற்றுள்ளேன் இயற்பியல் மற்றும் வேதியில் பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
கோச்சிங் சென்டர் எங்கும் நான் போகவில்லை. ஏனென்றால் அதை விட யூடிபூயில் சிறப்பாக நடத்துகிறார்கள்.. நான் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன்.. பள்ளியில் நன்றாக சொல்லி தந்தார்கள். இதனால் அடிப்படை சிறப்பாக இருந்தது. இதன் மூலம் என்னால் முதல் முறையிலேயே நீட் தேர்வை க்ளியர் செய்ய முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நீட் தேர்வு கட்டாயம் தேவை.
ஏழை மாணவர்கள்: நீட் இருந்தால் மட்டுமே என்னைப் போன்ற ஏழை மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியும்.. இல்லையென்றால் யாராலும் உள்ளே போக முடியாது. இதன் மூலம் 497 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட்டிற்கு முன்பு கிராமப்புற அரசுப் பள்ளிகளில் இருந்து யாரும் சென்றதாகத் தெரியவில்லை. நீட் இருந்தால் தான் அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியும்.. +2 தேர்வில் படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதினால் போதும்.. ஆனால், நீட் தேர்வைப் புரிந்து படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்..
தமிழ் வழி மாணவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. இத்தனை காலம் தமிழில் படித்தோம்.. இப்போது ஆங்கிலத்தில் இருக்கிறதே என கவலைகொள்ள வேண்டாம்.. க்ளியர் செய்த நான் சொல்கிறேன்.. ஆங்கிலத்தில் படித்து எழுதுவது ஈஸிதான். எனவே அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ளாமல் நீட் தேர்வுக்கு ரெடியாகுங்கள்.. நிச்சயம் ஈஸியாக அதை க்ளியர் செய்யலாம்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications