என்னோட போட்டோவா! திடீரென திருமணத்திற்கு வந்து சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்.. கண்ணீர் விட்ட நரிக்குறவர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியில் நடைபெற்ற நரிக்குறவர் இன மக்களின் திருமண விழாவில் தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சுற்றுசூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன். இவர் புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக செரியலூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.
செல்லும் வழியில் கீரமங்கலம் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெறுவதை கவனித்த அவர் திருமண வீட்டிற்கு முன் காரை நிறுத்த சொல்லி இருக்கிறார்.

பிளக்ஸ்
அந்த திருமண விழாவின் கட் அவுட்டில் அமைச்சர் மெய்யநாதன் புகைப்படம் இருந்துள்ளது. அதோடு திமுக நிர்வாகிகள் சிலர் புகைப்படமும் இருந்துள்ளது. இதை பார்த்ததும் அமைச்சர் அப்படியே சிலிர்த்து போய் உள்ளார். யாரோ ஒரு வீட்டு இல்ல திருமண விழாவில் நம்ம புகைப்படத்தை வைத்து இருக்கிறார்களே என்று நெகிழ்ச்சியாகி போன அமைச்சர் மெய்யநாதன்.. வாங்க போய் வாழ்த்திட்டு வரலாம் என்று காரை விட்டு இறங்கி உள்ளார்.

வீடு
திருமணம் நடக்கும் மாப்பிள்ளை வீடு முன் காரை நிறுத்திய அமைச்சர் அப்படியே சரசரவென உள்ளே நடந்து சென்றார். அங்கு இருந்த நரிக்குறவ இன மக்கள் திடீரென வெள்ளை வேஷ்டி சட்டையில் பலர் அங்கே வந்ததை பார்த்தது முதலில் புரியாமல் திகைத்து நின்றனர். அதன்பின் அமைச்சர் மெய்யநாதனை அடையாளம் கண்டுகொண்டு வேகமாக பலரும் வெளியே வந்து அவரை வரவேற்றனர். அமைச்சரை பார்த்ததும் அப்பகுதி மக்கள் எல்லோரும் அங்கே குவிந்தனர்.

வாழ்த்தினார்
அதன்பின் தம்பதிகளை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் இப்படி திடீரென வந்ததை பார்த்து அங்கு இருந்த நரிக்குறவ இன மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.அவருடன் வரிசையாக மக்கள் பலர் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணமக்களின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டபடி அமைச்சர் மெய்யநாதனுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவமும், அமைச்சரும் செயலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர்
கடந்த சில தினங்களுக்கு முன் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். சமீபத்தில் நரிக்குறவர் இன மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் தங்களுக்கு உதவி வேண்டி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவர்களை சந்தித்தார். அதோடு இவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி குறைகளையும் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications