5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை.. தலைமை ஆசிரியருக்கும் சிறை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நரியன் புதுப்பட்டி பள்ளி ஆசிரியர் அன்பரசன் என்பவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த அதே அரசு பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகர் என்பவருக்கு ஒர் ஆண்டுசிறை தண்டனை விதித்தும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நரியன் புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் அன்பரசன். அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஞானசேகரன்,

A teacher jailed for 7 years for who sexually assaulted a fifth grade student near Pudukkottai

இதில் ஆசிரியர் அன்பரசன் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் வைத்து கடந்த 21-3-2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு உடந்தையாக அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஞானசேகரன் இருந்துள்ளார்.

இதுகுறித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசன் மற்றும் ஞானசேகரன் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்றம் நீதிபதி சத்யா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் அன்பரசன் என்பவருக்கு 3 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 45 ஆயிரம் அபராதமும் மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் ஞானசேகரன் என்பவருக்கும் ஓர்ஆண்டு சிறை தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+