ஜஸ்ட் மிஸ்.. இது மட்டும் நடந்திருந்தால் அண்ணாமலை சிஎம்.. கரு நாகராஜன் ஆச்சரிய தகவல்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசியல் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. பல நடிகர்கள் புதிதாக அரசியல் கட்சி தொடங்கவுள்ளனர். அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கவுள்ளார். இந்நிலையில் 2026 தேர்தலில் இது மட்டும் நடந்திருந்தால் அண்ணாமலை தலைமையில் ஆட்சியமைந்திருக்கும் என்று கரு நாகராஜன் பகீர் தகவல் சொல்லியுள்ளார்.

புதுக்கோட்டையில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் நிர்வாகி கரு நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் எல்லாரும் சேர்ந்து 21.2 சதவிகிதம் ஓட்டை தான் பெற முறிந்தது. அண்ணாமலை தலைமையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அது 18.5 சதவிகிதம் ஓட்டை பெற்றது.

Annamalai Karu Nagarajan

ஜஸ்ட் மிஸ் ஆன ஆட்சி

திடீரென அந்த கூட்டணி எப்படி இவ்வளவு அதிகமான ஓட்டை பெற முடியும். இது வெற்றி கூட்டணியாக வரும் என்று மக்கள் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தனர். அந்த 18.5 சதவிகிதம் வாக்குகள் மீண்டும் அவர் தலைமையில் உருவாகியிருந்தால் கிடைத்திருக்கும். இன்றைக்கு அண்ணாமலை தலைமையில் புதிய ஆட்சி அமைந்திருக்கும். பாஜக ஆட்சி அமையும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். மக்களிடம் நம்பிக்கை இருந்தது.

ஆனால் அண்ணாமலை போய்விட்டார், அதனால் இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாமென தவெகவுக்கு ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள். படித்தவர்கள் உள்பட நிறைய பேர் உள்ளனர். இனி படிப்பா, நடிப்பா என்று யோசிப்பார்கள். அரசியல் கவர்ச்சியா, நாட்டின் வளர்ச்சியா என்று யோசிப்பார்கள். அடுத்த தேர்தலில் அதை நாம் எல்லாம் பார்க்கத்தானே போகிறோம். செங்கோட்டையன் பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கட்சியின் எம்எல்ஏக்களாக உள்ள 15 பேர் வருவார்கள் என அப்பட்டமாக பேசுகிறார்.

என்ன தான்ங்க நடக்குது

ஏற்கனவே அதிமுகவின் 26 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களின் 7 பேர் தான் தவெகவில் இணைந்துள்ளனர். மீதி இருப்போரும் வரப்போகிறார்கள் என்று சூசகமாக சொல்கிறார். இதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். மக்களை சிந்திக்க விடாமல் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இவர் பாஜக, அவர் பாஜக என்று மக்களை திசை திருப்பும் அரசியல் செய்கிறார்கள். தவெக செல்ல அதிமுக எம்எல்ஏக்கள் ரூ.35 கோடி பெற்றனர் என்று பொள்ளாச்சி ஜெயராமன் சொன்னதற்கு, யாரும் பதில் சொல்லவில்லை.

இதை நீதியரசர் விசாரிக்க வேண்டும். நான் ரூ.31 கோடி செலவு செய்தேன். அவர் ஏதாவது காசு கொடுத்திருந்தால், இந்த நாய்களிடம் வந்திருக்க மாட்டேன் என கூறுகிறார். ஐயுஎம்எல் எம்எல்ஏ, பணம் பதவி தருவதாக தவெக கூறியதை சொன்னார். குதிரை பேரம் தொடர்பாக வழக்கு நடக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது. இதைப்பற்றி ஊடகங்களில் விவாதிக்க வேண்டும். இடைத்தேர்தல் நடப்பதிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசே முடங்க போகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+