வாக்குப் பதிவான இன்று புதுக்கோட்டை பெண் வேட்பாளர் மல்லிகா மரணம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண் வேட்பாளர் மல்லிகா மரணமடைந்தார்.
தமிழக ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் கட்டமாகவும் இன்றைய தினம் 2-ஆம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலத்தில் உள்ள நெடுவாசல் மேற்கு ஊராட்சியின் 5ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மல்லிகா (40) என்பவர் போட்டியிட்டார்.
இன்று காலை இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது வேட்பாளர் மல்லிகாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதையடுத்து வாக்குச் சீட்டுகளில் இடம்பெற்றிருந்த பெயர் பேனாவால் அடிக்கப்பட்டு இறந்தார் என குறிப்பிட்டுவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications