அடங்காத மாமனார்.. கொந்தளித்த மருமகள்.. ஓவர் டார்ச்சர் தந்தவரை சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை.. ஷாக்
புதுக்கோட்டை மாமனாரை கொன்ற மருமகள் கைதாகி உள்ளார்
புதுக்கோட்டை: உணவில் விஷம் வைத்து மாமனாரை கொன்றதாக மருமகளை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தன் மாமனார்-மாமியாரை ஒரு ஆண் கூட எளிதில் சமாளித்து நல்ல பெயரை வாங்கி விடக்கூடும்.. ஆனால், பெண்ணுக்கு அவ்வளவு சுலபம் இல்லை...
அதுவும் புதிய சூழலை சந்தித்தாலும் எத்தனையோ பிரச்சனைகளையும் அங்கே எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. இதில் வெற்றி பெறுவதுதான் இறுதியில் மேல் கடினமாகிவிடுகிறது.

முதுகுளத்தூர்
வரதட்சணை பிரச்சனை என்றாலே மாமியார் தான் காரணமென்றாகி விடுகிறது.. பாலியல் தொல்லை என்றால அந்த வீட்டு மாமனார் தான் காரணமாகிறார் என்று சொல்லும் அளவுக்கு ஆங்காங்கே மலிவான செயல்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது. அப்படித்தான், இப்போதும் ஒரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்துள்ளது..

டார்ச்சர்
இங்கு கேளல் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி வினோபாராதுஜன் - கனிமொழி.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருஷங்கள் ஆகிறது.. ஆனால், குழந்தை இல்லை.. கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறதே என்று தம்பதி இருவருமே விரக்தியில் இருந்திருக்கிறார்கள்.. இதனிடையே, கனிமொழிக்கு அவரது மாமனார் முருகேசன் அவ்வப்போது பாலியல் தொல்லை தந்து வருவதாக தெரிகிறது..

புகார்
அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில்தான் அளவுக்கு அதிகமாக தொல்லை தர முயன்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி, நடந்தது குறித்து கணவர் வினோபாராஜனிடம் சொல்லி உள்ளார்.. ஆனால் அவர் அதனை நம்பவில்லை.. பலமுறை இதுகுறித்து சொல்லியும், "என் அப்பா அப்படியெல்லாம் கிடையாது.. அபாண்டமா பொய் சொல்லாதே" என்று வினோபா சொன்னதாக தெரிகிறது.

மாமனார்
இதனால் மேலும் வெறுப்பின் உச்சத்துக்கு போனார் கனிமொழி.. ஒருபக்கம் கணவனின் புறக்கணிப்பு மறுபக்கம் அத்துமீறி கொண்டிருக்கும் மாமனார் என இருதலைகொள்ளியாக துடித்து, வேறு வழியில்லாமல்தான் இந்த அபாய முடிவுக்கு வந்தார்... கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி இரவு சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டார்.. அதாவது குழம்பில் எலிபேஸ்ட்டையும், குருணை மருந்து ரெண்டையுமே கலந்து மாமனாருக்கு தந்து சாப்பாடு போட்டுள்ளார்.

உயிரிழப்பு
அதனை சாப்பிட்ட முருகேசனுக்கு திடீரென வயிற்றுவலி வந்து அவதிப்பட்டுள்ளார்.. பதறிப்போன குடும்பத்தினரும் அவரை உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறுநாளே இறந்துவிட்டார்.. அப்போது வரை இந்த விஷயத்தை பற்றி கனிமொழி யாரிடமும் சொல்லவில்லை.. குடும்பத்தாரிடம் மறைத்தே வந்துள்ளார்.

வாக்குமூலம்
ஆனால், உண்மையை மறைத்ததால் கனிமொழிக்கு உறுத்தல் அதிகமாகி விட்டது.. இந்த உறுத்தல் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது.. இதற்கு மேலும் விஷயத்தை மறைக்க விரும்பாமல், கனிமொழி, அநேரடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக தந்துவிட்டார்.. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஏஓ ஹரிகிருஷ்ணன் கீழத்தூவல் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சாப்பாட்டில் விஷம் வைத்து மாமனாரை கொன்ற மருமகள் கனிமொழியை கீழத்தூவல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனசாட்சி
கனிமொழி செய்தது முழுக்க முழுக்க குற்றம் என்றாலும், கனிமொழி நினைத்திருந்தால் இந்த தவறை தானாகவே போலீசில் சிக்கும்வரை மறைத்திருக்கலாம்.. ஆனாலும் அவரது மனசாட்சியே அவரை கொன்றுள்ளது.. அளவுக்கு அதிகமான மன அழுத்தமும், உறுத்தலும்தான், துணிவு முடிவை எடுக்க வைத்துள்ளது.. வினோபாராஜு இந்த விஷயத்தில் அப்போதே விழித்து கொண்டிருந்தால், கனிமொழிக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. அவர் அப்பாவும் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்..!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications