புள்ளைக்கு குறி பாக்கனும்..உள்ளே போ! சிறுமியின் தாயை மிரட்டி அனுப்பிய ‘பழனி’! படபடத்த புதுக்கோட்டை!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே வயிற்று வலியால் துடிதுடித்த சிறுமியின் பிரச்சனையை சிறப்பு பூஜை மூலம் குணமாக்குவதாக கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டுபாக்கூர் பூசாரியை கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர் புதுக்கோட்டை போலீசார்.
Recommended Video
1000 நித்தியானந்தாக்கள், 500 பிரேமானந்தாக்கள் தினந்தோறும் வகை வகையான மோசடிகள் பாலியல் புகார்களில் சிக்கி வந்தாலும் இது போன்ற போலிச் சாமியார்களின் அட்ராசிட்டிகள் குறைந்து போவதாக தெரியவில்லை.
வசியம், பில்லி சூனியம், செய்வினை, குறிப்பார்க்கிறேன் என நாள்தோறும் வகை வகையாக ரில்களை சுற்றி பொதுமக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் டுபாக்கூர் சாமியார்களின் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. அந்த டுபாக்கூர்களையும் நம்பும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

போலி சாமியார்
மோசடி செய்து பணம் சம்பாதிப்பது ஒரு புறம் இருந்தாலும் பல பெண்களை வாழ்க்கையை சீரழிக்கும் பிரேமானந்தா வகை சாமியார்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அதனை நம்பி ஏமாறும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் வயிற்று வலிக்காக சென்ற சிறுமிக்கு பூஜை செய்வதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டையில் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அந்த சிறுமி கடும் வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார். அவருக்கு அல்சர் போன்ற ஏதாவது ஒரு நோய் இருக்கலாம் அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லுங்கள் என அருகில் இருந்தவர்கள் கூறிய நிலையில் அதனை கண்டு கொள்ளாத சிறுமியின் தாயார் அதே பகுதியில் இருக்கும் 65 வயது கோவில் பூசாரியான பழனி என்பவரிடம் கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
இதை அடுத்து சிறுமியின் வீட்டுக்கு வந்த பூசாரி பழனி சிறப்பு பூஜை மூலம் உன் குழந்தையின் வயிற்று வலியை நான் சரி செய்து விடுவேன் அதற்கு செலவாகும் எனக் கூறியுள்ளார். நாட்டுக்கோழி மட்டன் மசாலா என கிடைத்ததை எல்லாம் சுருட்டி கொண்ட பூசாரி பழனி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பூசாரியின் வார்த்தையை நம்பிய அந்த சிறுமியின் தாயார் தனது குழந்தையை பூசாரியின் வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தைக்கு பில்லி சூனியம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டுமென்றால் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனவே நீ வீட்டின் வெளியே இரு எனக்கூறி அவரை அமர வைத்துள்ளார்.

சிறுமி கர்ப்பம்
மேலும் சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவரது வயிற்று வலியை போக்குவராக கூறி அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அடிக்கடி அழைத்து வந்தால் தான் பூஜை செய்ய முடியும் எனக் கூறியதோடு சிறுமியிடம் அத்து மீறியதை தொடர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் சிறுமி மூன்று மாத கர்ப்பம் ஆகியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பூசாரி பழனியின் பாலியல் வன்கொடுமை குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதிரடி கைது
இந்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கோவில் பூசாரி பழனிதான் சிறுமையை சீரழித்தது தெரிய வந்த நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி பூசாரி பழனியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பூசாரி பழனியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதையடுத்து குண்டச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பூசாரி பழனி தற்போது புதுக்கோட்டை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications