கடும் எதிர்ப்பு.. கறுப்புக்கொடியோடு குவிந்த தொண்டர்கள்.. அதிர்ந்த சித்தன்னவாசல்.. ஆளுநர் பயணம் ரத்து
புதுக்கோட்டை: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சித்தன்னவாசல் வர இருந்த நிலையில் அவருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தன. இந்நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து, மாநில அரசுக்கும் அவருக்கும் இடையேயான உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைப்பது தொடங்கி, திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது என ஆளுநரின் போக்கு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் உச்சமாக, சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு ஒன்னுமே இல்லை என்றும், தேச தந்தை நேதாஜிதான் எனவும் அவர் பேசியிருந்தது அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதேபோல ஆளுநர் சார்பில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தையும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இந்நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றிருந்தார். ஆனால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இதில் பங்கேற்கவில்லை. அமைச்சர் நிகழ்ச்சிக்கு வருவதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்த நிலையில், கடைசி வரை அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். இதே பாணியில் ராஜகண்ணப்பனும் நிகழ்வை புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஆளுநர் சித்தன்னவாசல் ஓவியங்களை பார்வையிட இருந்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் ஆளுநர் வரும் வழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியின் கருப்புக்கொடி மற்றும் பலூனை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கந்தர்வக்கோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரையும் பங்கேற்றிருந்தார்.
போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் சித்தன்னவாசல் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரமின்மையால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications