புதுக்கோட்டை அதிர்ச்சி போல பெரம்பலூரில் சம்பவம்.. மேற்கூரையை துளைத்துச் சென்ற துப்பாக்கி குண்டு!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு வீட்டுக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் மருதடிஈச்சங்காடு கிராமத்தில் சுப்ரமணி என்பவரது வீட்டின் மேற்கூரையைத் துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது.
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதியில், காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.

துப்பாக்கி சூடு
நேற்று காலை, இங்குள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி நடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மருதஈச்சாங்காடு பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியின் வீட்டுக் கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. அவரது வீட்டுக் கூரை ஆஸ்பெடாஸ் சீட்டால் போடப்பட்டிருந்தது. அதைதுளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது.

புதுக்கோட்டை
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. ஏற்கெனவே இதுபோல் ஒருமுறை துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். முன்னதாக கடந்த மாத இறுதியில் புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து இதேபோல வெளியேறிய குண்டு ஒன்று, சிறுவனொருவனின் தலையில் பலமாக தாக்கியிருந்தது.

காவல்துறை
புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் சம்பவத்தில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். பதினோரு வயது சிறுவன் போலீஸாரின் அஜாக்கிரதையால் உயிரிழந்ததால், அந்த துப்பாக்கி சுடும் மையத்தை மூடினார் மாவட்ட கலெக்டர். இதையடுத்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என காவல்துறை டி.ஜி.பி தெரிவித்தார். இதையடுத்து சிறுவன் உயிரிழந்த வழக்கில் தமிழக காவல்துறையும் சேர்க்கப்பட்டது.

தமிழக அரசு
இச்சம்பவம் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டுமொருமுறை பெரம்பலூரில் இதேபோல நிகழ்வு ஏற்பட்டுள்ளது. வீட்டுக் கூரைக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டிருந்தாலும், இரண்டாவது முறையாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்படுவதாக தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications