Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறந்தாங்கியில் தொழிலதிபரை கொன்று.. 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் அவர் வீட்டிலிருந்த 100 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

Recommended Video

    புதுக்கோட்டை: தொழிலதிபர் கழுத்தறுத்துக் கொலை: 100 சவரன் நகை கொள்ளை… 3 பேர் கைவரிசை!

    புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ஆப்டிகல்ஸ் கடை நடத்தி வருகிறார். உடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகிறார்கள்.

     அறந்தாங்கி

    அறந்தாங்கி

    இதனால் அறந்தாங்கி வீட்டில் நிஜாமும் ஆயிஷாவும் மட்டும் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு நிஜாம் வீட்டின் முன் நின்று கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் 3 பேர் குதித்தனர்.

     நிஜாம் அதிர்ச்சி

    நிஜாம் அதிர்ச்சி

    அவர்களை கண்டு திடுக்கிட்ட நிஜாம், அவர்களை தடுக்க முயற்சித்தார். அப்போது 3 பேரும் சேர்ந்து நிஜாமின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். இதில் நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அந்த கும்பல், ஆயிஷாவை கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து பீரோ சாவியை பறித்தனர்.

    100 சவரன் கொள்ளை

    100 சவரன் கொள்ளை

    பின்னர் பீரோவை திறந்து 100 சவரன் நகை மற்றும் ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நிஜாமின் உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து நிஜாமின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியும் விசாரணை நடத்தினார். தொழில் போட்டி காரணமாக நிஜாம் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா அல்லது கொள்ளை சம்பவத்தின் போது தடுக்க முயன்றதால் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+