பணம் பதுக்கல்? அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் சோதனை
புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளை முருகேசன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாள் இன்று. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை எழில் நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சோத்துப்பாளை முருகேசன் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திரசேகரின் ஓட்டுநர் வைக்கோல் போரில் ரூ1 கோடி பதுக்கி வைத்திருந்தது பிடிபட்டது.
இதனால் சோத்துப்பாளை முருகேசன் வீட்டை சுற்றிய பகுதிகளிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என தீவிரமாக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications