Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொம்பேறி மூக்கன் பாம்பு புதுக்கோட்டைக்கு வந்து.. பைக்கில் 4 அடி நீளத்தில்.. கிட்ட பார்த்தால்? ஓ காட்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: சென்னையில் பாம்பு கடியால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேனி சின்னமனூர் மற்றும் புதுக்கோட்டையில் நிகழ்ந்த அடுத்தடுத்த பாம்பு தொடர்பான சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன..

சென்னை குன்றத்தூர் நகராட்சி நத்தம் பகுதியைச் சேர்ந்த வையாபுரியின் மகன் அபிஷேக்.. 9 வயதான அபிஷேக் கடந்த 31ம் தேதி, குளிப்பதற்காக சுடுநீர் வைக்க வீட்டின் அருகே இருந்த விறகு கட்டைகளை எடுக்க சென்றபோது, அங்கு மறைந்திருந்த நல்ல பாம்பு அபிஷேக்கை கடித்தது.

Komberi Mookan snake 4 foot snake Pudukkottai Theni

உடனடியாக பதறிய பெற்றோர், அபிஷேக்கை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நேற்று அபிஷேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டான்.. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி ஜெயபிரகாஷ் வீட்டில் 5 நீள பாம்பு

இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் தேனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது... சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையம்மாள்புரம் காலனியில் வசித்து வரும் ஜெயப்பிரகாஷ் என்பவரின் வீட்டிற்குள், சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.

இதைக் கண்ட ஜெயப்பிரகாஷ் அதிர்ச்சியடைந்து, உடனடியாக சின்னமனூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கட்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிறகு பிடிபட்ட பாம்பு சின்னமனூர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

கொம்பேறி மூக்கன் பாம்பு - 4 அடி நீளம்

அதேபோல புதுக்கோட்டையிலும் ஒரு பாம்பு நேற்றைய தினம் பிடிபட்டுள்ளது.. பிஎல்ஏ ரவுண்டானா அருகே உள்ள பேக்கரி முன்பு, பெண் ஒருவர் தன்னுடைய பைக்கை நிறுத்தி இருந்தார்..

அப்போது அந்த வண்டியில், சுமார் நான்கு அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஏறிவிட்டது.. பாம்பு வண்டியில் ஏறியதை பார்த்த சிலர், அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அனைவருமே சேர்ந்து நின்று பாம்பை துன்புறுத்தி பிடிக்க முயன்றதால், அந்த பாம்பின் தலை தவறுதலாக துண்டானது..

பின்னர் பாம்பு அப்புறப்படுத்தப்பட்டதும், அந்த பெண் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

பயந்து ஓடும் பாம்புகள்

அதனால்தான், பாம்பை கண்டதும் வனத்துறையினருக்கோ அல்லது போலீசுக்கோ உடனடியாக தகவல் தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது..

பாம்புகள் மனிதர்களை தாக்குவதற்காக அல்ல, பாதுகாப்பான இடம் தேடியே இவ்வாறு வருகின்றன, பாம்பு மனிதனை கண்டால் கடிப்பதைவிட தப்பிச் செல்லவே விரும்பும் என்பதால், அவைகளை கொல்லாமல் பாதுகாப்பாக பிடிக்க முயல வேண்டும் என்கிறார்கள்,

அடைப்பு பொருட்கள்

மழைக்காலம் மற்றும் வெள்ளப்பெருக்கு நேரங்களில் பாம்புகள் தங்களின் நிலத்தடி வாழ்விடங்களில் நீர் புகுவதால் வெளியே வர வேண்டிய நிலை உருவாகிறது.
மூச்சுவிட இடம் தேடி அவை குழாய்களின் வழியாக வரக்கூடும்.. அதனால்தான் கழிவறைகளில் அதிக அளவு பாம்புகள் பிடிபடுகின்றன.

கழிவுநீர் குழாய்களில் எலிகள் இருந்தால், அவற்றை வேட்டையாட பாம்புகள் வர வாய்ப்பு உள்ளது. செப்டிக் டேங்க் மூடிகளை உறுதியாக மூடுதல் மற்றும் ஒருவழி வால்வுகளைப் பயன்படுத்துதல் பாதுகாப்பை உறுதி செய்யும். அடைப்புகள் இல்லாமல் பொருட்களை அப்புறப்படுத்திவிடுவது நல்லது என்று பாம்பு பிடி வீரர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+