ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்க... மத்திய அரசுக்கு சீமான் வக்காலத்து -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுக்கோட்டை: 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் சீமானின் கருத்து உள்ளதாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இவர் இதனைக் கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யும் போது அதை கண்டுகொள்ளாத சீமான், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார திட்டமாக விளங்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை குறை கூற என்னக் காரணம் என அவர் வினவியுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நாடு முழுமதும் 14 கோடி பேர் பயன்பெற்று வருவதாக புள்ளிவிவரத்தையும் அடுக்கினார் கே. பாலகிருஷ்ணன்.
மேலும், கடந்த காலங்களில் கமல்ஹாசன் பேசியதை போல் இப்போது சீமான் பேசியிருப்பதாகவும், இதனிடையே 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களிலும் செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று எனவும் கூறினார்.
இதனிடையே கூட்டணியை பொறுத்தவரை மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை போல் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்க்க முடியாது என்றும் இருப்பினும் திமுக கூட்டணி ஓரளவு கட்டுப்பாடுடன் இயங்குவதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், குடிமைப்பணி தேர்வில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருப்பதால், இனி வரும் காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பயிற்சி மையங்களை அதிகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 2024 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறை தேவையற்றது என தமிழக அரசுக்கு யோசனையும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications