350 தட்டுகளில் சீர்! அக்கா மகளை பூரிக்க வைத்த தாய்மாமன்கள்! கிழக்கு சீமையிலேவை மிஞ்சிய பாசம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக கவுன்சிலர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் 350 சீர் தட்டுகளை லாரியில் கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.

Recommended Video

    350 தட்டுகளில் சீர்! அக்கா மகளை பூரிக்க வைத்த தாய்மாமன்கள்! கிழக்கு சீமையிலேவை மிஞ்சிய பாசம்

    ஒரு குழந்தைக்கு தாய்மாமன் உறவும், அத்தை உறவுகளும் மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ பிறக்கும் குழந்தைக்கு காதுகுத்து முதல் கல்யாணம் வரை இந்த உறவுகள் சீர் கொண்டு வரும்.

    இந்த சீரை வைத்தே அந்த பெண், ஆணின் மதிப்பும் மரியாதையும் அவரவர் வீட்டில் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு இருக்கும். இது அந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகியோருக்கும் பெருமையை கொடுக்கும்.

    குடும்பங்கள்

    குடும்பங்கள்

    இந்த சீரால் எத்தனையோ குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் எழுந்திருக்கின்றன. அதாவது சீர் குறைத்து செய்தல், சீர் கொண்டு வராமல் இருத்தல் உள்ளிட்டவைகளால் ஏற்பட்ட சண்டைகள் ஏராளம். அந்த அளவுக்கு அத்தை மற்றும் தாய்மாமன்களின் உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

    6 சகோதரிகள்

    6 சகோதரிகள்

    அண்மையில் திருவாரூரில் தங்களது சகோதரன் இறந்த நிலையில் அவரது 6 சகோதரிகள் சேர்ந்து அந்த சகோதரனின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை அந்த ஊரே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் 600 தட்டுகளில் லாரிகள் மூலம் சீர் செய்திருந்தனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை

    அது போல் ஒரு சம்பவம் புதுக்கோட்டையிலும் நடந்துள்ளது. புதுக்கோட்டையில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் சுப சரவணன். இவரது மகள் பூப்பெய்தினார். இதையடுத்து அவருக்கு நேற்று ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

    சீர்

    சீர்

    இந்த நிகழ்வுக்கு தாய்மாமன்கள் சீர் கொண்டு வரும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மொத்தம் 350 தட்டுகளில் லாரியில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. மேளதாளம் முழங்க டிரம்ஸ் இசை வாசிப்புடன் ஊர்வலமாக திருமணம் மண்டபத்திற்கு வந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விழாவே களைகட்டியது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் தாய்மாமன்களின் சகோதரி பாசம் கிழக்கு சீமையிலே படத்தை விஞ்சியிருந்ததாக பேசிக் கொண்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+