புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறைப்பணியில் திமுக அரசுக்கு நிகராக யாருமில்லை... அமைச்சர் ரகுபதி பெருமிதம்..!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: இறைப்பணியில் திமுக அரசுக்கு நிகராக யாருமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவர் இதனைக் கூறினார்.

தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபிறகு தான் பல நூறு கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படுவதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

திமுக என்றாலே அது நாத்திகர்கள் கட்சி என்றும் கோயில் திருப்பணி உள்ளிட்ட பணிகளுக்கு அக்கட்சியின் ஆட்சி முக்கியத்துவம் கொடுக்காது எனவும் பரவலான ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் இது போன்ற விமர்சனங்களை எல்லாம் உடைத்தெறியும் வகையில் இப்போது அமைந்துள்ள திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்து சமயஅறநிலையத்துறை பவர்ஃபுல் துறையாக மாற்றி அதன்மூலம் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோயில் சொத்து

கோயில் சொத்து

கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பது, கோயில்களில் அன்னதானம் வழங்குவது, காசி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு செல்ல ஆண்டுக்கு ரூ.25,000 உதவித் தொகை தருவது என இந்துசமய அறநிலையத்துறை தூள் கிளப்பி வருகிறது. தேர்தலுக்கு முன்பு திமுகவை விமர்சித்த பலரும் இப்போது அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகளை பார்த்து பாராட்டச் செய்கின்றனர்.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

இதனிடையே புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனையில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, இறைப்பணியில் திமுகவுக்கு இணையாணவர்கள் யாரும் கிடையாது என பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக அரசு அமைந்த பிறகு தான் பல நூறு கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் செல்வாக்கு மற்ற முக்கிய துறைகளுக்கு இணையாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

நிகரில்லை

நிகரில்லை

கோயில் திருப்பணிகளுக்கு மட்டும் ரூ.100 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளதாகவும், இதனால் ஆன்மிகப் பணியில் தங்களுக்கு நிகர் யாருமில்லை எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். கோயிலுக்கு காணிக்கையாக வரும் தங்கங்களை உருக்குவது, கோயில் கோயிலாக நேரில் சென்று ஆய்வு செய்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது என அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகளை பார்த்து செயல்பாபு என முதலமைச்சர் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Raghupathi says, There is no one like the DMK government in spiritual work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X