சிபாரிசு கேட்டு வர வேண்டாம்.. வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அமைச்சர் ரகுபதி.. அதிருப்தியில் திமுகவினர்..!
புதுக்கோட்டை: நீதிமன்ற பணிகளுக்காக சிபாரிசு கேட்டு தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் திமுகவினரை அதிருப்திகொள்ளச் செய்துள்ளது.
நீதிமன்ற அலுவலக உதவியாளர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு பரிந்துரை கோரி அமைச்சர் ரகுபதி இல்லத்திற்கு கட்சியினர் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக சென்னையை காட்டிலும் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ரகுபதியை சந்திப்பதற்காக சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

காலி பணியிடம்
நீதிமன்ற பணியிட விவகாரத்தில் அமைச்சர் தலையிட முடியாது என அவரது உதவியாளர்கள் எடுத்துக் கூறினாலும் கட்சியினர் அதை கேட்டதாக தெரியவில்லை. அப்புச்சியை (ரகுபதியை இப்படி அழைக்கும் கட்சியினர் ஏராளம்) பார்த்துவிட்டுத் தான் செல்வோம் என்றும் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதனால் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காலையில் வீட்டிலிருந்து புறப்படுவதற்குள் அமைச்சர் ரகுபதிக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அதிரடி நோட்டீஸ்
கட்சியினரிடம் கடுகடுப்பு காட்டினால் அது வேறுமாதிரி ஆகிவிடும் என்பதால் அமைச்சர் தரப்பும் சிபாரிசு கடிதம் கோரி வருபவர்களிடம் பொறுமைகாட்டி வந்தது. இதனிடையே நாளுக்கு நாள் நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு பரிந்துரை கடிதம் தருமாறு ரகுபதி இல்லத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், அதிரடி நோட்டீஸ் ஒன்றை வீட்டு வாசலில் ஒட்டி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர் அமைச்சர் ரகுபதியின் அலுவலக ஊழியர்கள்.

வர வேண்டாம்
நீதிமன்ற பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்படுவதால் இது தொடர்பான கோரிக்கைகளுடன் அமைச்சரை யாரும் அணுக வேண்டாம் என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே நீதிமன்ற பணியாளர்களை தேர்வு செய்வதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க நீதிமன்றம் தொடர்புடைய விவகாரம் என்பதால் அதில் தலையிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பாத அமைச்சர் ரகுபதி, அதற்கேற்றவாறு தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறார்.

அதீத நம்பிக்கை
இதனிடையே ரகுபதி அண்ணன் எனக்கு அவ்வளவு பழக்கம், நான் சொன்னால் நிச்சயம் செய்துகொடுப்பார் என்ற அவர் மீதான அதீத நம்பிக்கையில் சந்திக்க செல்பவர்களுக்கு இந்த நோட்டீஸ் கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளதால் அங்கு உள்ளூர் அரசியல் பனிப்போர் நிலவி வரும் சூழலில் இந்த நோட்டீஸ் விவகாரம் அதை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications