ஞாயிறு லாக்டவுன்! மொய்விருந்துக்கு சிக்கல்! அழைப்பிதழ் கொடுத்த விழாக் குழுவினர் தவிப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதங்களில் மொய் விருந்துகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மார்கழி மாதத்திலும் கூட இப்போது அந்த விருந்து நடத்தப்படுகிறது.
அந்த வகையில் வடகாடு, கீரமங்கலம், பெரியாளூர், கொத்தமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை மொய்விருந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழக அரசின் ஞாயிறு பொதுமுடக்கம் என்ற அறிவிப்பு மொய்விருந்து விழாக்குழுவினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் மொய் விருந்துகள் நடத்தி அதில் கிடைக்கும் தொகையை கொண்டு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம்.

மொய் விருந்து
ஆனி, ஆடி, மாதம் வந்துவிட்டாலே போதும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மொய் விருந்துகள் தடபுடலாக நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டு, பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு அறுசுவை அசைவ விருந்துகள் அமர்களப்படும். நூற்றுக்கணக்கான தேக்சாகளில் சோறு வடித்து கிடா கறிக்குழம்பு வைத்து வந்திருக்கக் கூடிய விருந்தாளிகள் திக்குமுக்காடும் அளவுக்கு கவனிப்புகள் பலமாக இருக்கும். இவை அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனி,ஆடி மாதங்களில் மட்டுமே நடத்தப்படும்.

விருந்துக்கு தடை
ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட சூழலில் மொய் விருந்துகள் நடத்தப்படுவதிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் மார்கழி மாதமான தற்போதும் மொய் விருந்தை நடத்த கீரமங்கலம், பெரியாளூர், கொத்தமங்கலம் பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஞாயிறு லாக்டவுனால் மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கணிசமான தொகையை ஈட்டலாம் என நினைத்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

பொருளாதார ரீதியில்
பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள உறவுமுறைகளையும், நண்பர்களையும் கை தூக்கிவிடும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொய் விருந்துகள் தோன்றின. அவரவர் வசதிக்கேற்ப ஐநூறு, ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை மொய் செய்வது காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. மொய் விருந்துகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் கடன் பெறாமல் தொழில் தொடங்கி வெற்றிக்கண்டவர்கள் ஏராளம். மொய் விருந்தை மேலோட்டமாக பார்க்கும் போது அது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரிந்தாலும் அதன் பயனும், நன்மையும் அதனை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

வாழ்க்கையில் உயர
வாழ்க்கையில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த மொய் விருந்துகள் பெரியளவில் கை கொடுத்து உதவுகின்றன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு தொழில் தொடங்குவதாக கூறி வங்கியில் கடன் கேட்டு சென்றால், பலருக்கும் அவ்வளவு எளிதாக கடன் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் சொற்ப தொகைதான் கிடைக்கும், அதற்கும் மாதந்தோறும் வட்டி கட்ட வேண்டியது வரும். இப்படிப்பட்ட சூழலில் மொய் விருந்துகள் பலரது வாழ்க்கைக்கும் அச்சாரமாக அமைந்து அவர்களை கரை சேர்க்கிறது.

பாதுகாப்புக்கு ஆட்கள்
மொய் விருந்து நடைபெறும் இடங்களில் பரபரப்பாக விருந்து ஒரு புறம் நடைபெற்றாலும் மொய் வசூல் செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஆட்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பார்கள். அதில் பெரும்பாலும் வெளியாட்களை தவிர்த்து விருந்து நடத்தக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் தான் இருப்பார்கள். கடந்த பல வருடங்களாக கோடிகளில் மொய் வசூல் ஆகி வருவதால் பணத்தை எண்ணுவதற்கு பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மொய் வசூல் மையங்களில் செக்யூரிட்டி ஆட்களும் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு
மொய் விருந்துகள் மூலம் சமையல்காரர்கள், பந்தல்காரர்கள், ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி வியாபாரிகள், ஆட்டுக்கறி விற்பனையாளர்கள், மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications