NO:1 .. "முதல் முதல்வர்" ஸ்டாலின்.. அதுவும் இந்தியாவிலேயே.. சாதனை மேல் சாதனை.. சொல்றது யார்னு பாருங்க
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ந்தும் பாராட்டியும் பூரித்தும் பேசிஉள்ளார்
புதுக்கோட்டை: எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தொல்லை கொடுப்பதற்காக குறுக்கு வழியில் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள், பலசமயங்களில் சர்ச்சையாகி போவது வழக்கமாக இருந்து வருகிறது.. குறிப்பாக, சனாதன தர்மம் குறித்து ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆளுநரின் பொறுப்பு என்ன? அவர் தன் கடமையை மறந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகர் போல செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்..

வீரமணி சரவெடி
அந்தவகையில், ஒவ்வொரு முறையும் ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு முதல் நபராக கண்டனத்தை பதிவு செய்து வருபவர் திராவிடர் கழக தலைவர் வீரமணி. இந்துத்துவா விவகாரமாகட்டும், ஆன்லைன் ரம்மி விவகாரமாகட்டும், திராவிடர் கழகம் சார்பில் கண்டனங்கள் வெடித்து கிளம்பிவிடும்.. திமுக அரசு மீதான விமர்சனங்களை பாஜக தரப்பு முன்வைத்தாலும், அதற்கும் பதிலடி தந்துவிடுவார் கி.வீரமணி. 4 நாட்களுக்குமுன்புகூட ஆன்லைன் மசோதா விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்..

நெருப்பாறுகள்
"சட்டமன்ற அவமதிப்பு என்பதையும் தாண்டி, உயிர்க்கொலை நடப்பதைத் தடுக்காத குற்றத்தனையும் ஆளுநர் செய்கிறார், இது நியாயமா? மனிதநேயத்திற்கும் எதிரானதல்லவா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைத்தும் - இல்லாததைச் சொல்லுவதும் ஆளுநருக்கு அழகா? பொறுமைக்கும் எல்லை உண்டு. மக்கள் பணத்தை ஊதியமாகப் பெறும் ஒரு பொது ஊழியர் இப்படி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் கடமை தவறலாமா? இதன் விளைவு மக்களின் எதிர்ப்பும் எரிமலையாகி வருகிறது என்பதை ஆளுநர் உணரட்டும்! மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் விளையாடாதீர்! நெருப்பாற்றிலும், நெருக்கடியிலும் நீந்தி கரை சேர்ந்த இயக்கம் என்பதை ஆளுநரே, மறவாதீர்! மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் விளையாடாதீர்! என்று வீரமணி எச்சரித்திருந்தார்..

வீரமணி காட்டம்
இந்நிலையில், மீண்டும் ஆளுநர் பதவி மற்றும் பொறுப்பு குறித்து வீரமணி ஒரு பேட்டி தந்துள்ளார்.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.. பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, "ஆளுநர் பதவி என்பது அண்ணா கூறியது போல ஆட்டுக்குத்தாடி நாட்டுக்கு கவர்னர் தேவை இல்லை.. இப்போது பாஜக கவர்னர் பதவியை அரசியல் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

நம்பர் 1 முதல்வர்
எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்காக குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக பயன்படுகின்ற முறை தவறான முறை.. அரசியல் சட்டத்திற்கு இந்த முறையை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.. திமுக ஆட்சியால் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்.. தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.. சாதனைக்கு மேல் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்..

முதல் முதல்வர்
நாளுக்கு நாள் சாதனை செய்து இந்தியாவிலேயே "முதல் முதல்வர்" என்று ஸ்டாலின் பெயரெடுத்து இருக்கிறார்.. தான் முதல் முதல்வராக இருந்தால் மட்டும் போதாது.. தமிழ்நாடும் முதலாவது மாநிலமாக செயல்பட வெண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்... இந்த ஈரோடு தேர்தலில் காணாமல் போகிறவர்கள் காணாமலேயே போவார்கள், கண்டுகொள்ளப்படுபவர்கள் எல்லாம் கண்டுகொள்ளப்படுவார்கள்.. பெரியார் கொள்கையை நிலைக்க செய்யவே இந்த இடைத்தேர்தல்... இந்த இடைத்தேர்தலை நிர்ணயிப்பது எதிரிகளே என்று தெரிவித்தார் மூத்த தலைவர் கி.வீரமணி.












Click it and Unblock the Notifications