தைலமர காட்டில் உல்லாசம்.. பெண் திடீர் மரணம்.. புதுக்கோட்டை நர்சுக்கு நேர்ந்த சோகம்
Recommended Video

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காதலியுடன் உல்லாசமாக இருக்கும்போது காதலி திடீரென மரணமடைந்தார். இதனால் பதறிய காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்துள்ளது குலமங்கலம் வடக்கு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (19). இவர் நர்சிங் படித்துள்ளார்.
ஆலங்குடியில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். கடைக்கு எதிரில் உள்ள ஒரு கடையில் அதிரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (22). இவர் டாட்டா ஏஸ் வாகனத்தின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

மருந்து கடை
இந்நிலையில் மருந்து வாங்க கடைக்கு வரும் போது கஸ்தூரிக்கும் நாகராஜனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு மருந்து கடை மூடப்பட்டுவிட்டது.

தைலமரம்
இதையடுத்து கஸ்தூரியை தனது வாகனத்தில் அழைத்துக் கொண்டு மாங்காடு தைல மர காட்டிற்கு நாகராஜன் சென்றார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

திடீரென மரணம்
அந்த சமயத்தில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பது தெரியவில்லை.

சென்னைக்கு தப்ப திட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், கஸ்தூரியின் உடலை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அம்புலியாறு அதிராம்பட்டினம் அருகே உள்ள அம்புளி ஆற்றின் கீழே உள்ள பாலத்தின் அடியில் போட்டுவிட்டு சென்னைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

போலீஸில் சரண்
இதனை அடுத்து தன்னுடைய நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் சென்னைக்கு செல்லாதே, காவல் நிலையத்தில் சரணடைந்துவிடு என ஆலோசனை கூறியுள்ளனர். அதன்பேரில் ஆலங்குடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பரபரப்பு
இந்நிலையில் நாகராஜன் சரணடைந்தது தெரியாமல் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் சென்னை சென்று அவரை தேடியுள்ளனர். அதுபோல் நாகராஜனை கைது செய்து கடும் தண்டனை விதிக்கக் கோரி இன்று காலை கீரமங்கலம்-அறந்தாங்கி சாலையில் பனங்குளம் மற்றும் பெரியாளுர் விளக்கு ஆகிய இடங்களிலும் பஸ் மறியல் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications