எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு!
புதுக்கோட்டை: ஆடு திருடர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, 2 பைக்குகளில் ஒரு கும்பல் வருவதை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் பார்த்துள்ளார்... அந்த நபர்களிடம் ஆடுகள் இருந்ததால் சந்தேகமடைந்த பூமிநாதன், பைக்குகளை வழிமறித்திருக்கிறார்.. ஆனால் அந்த கும்பலோ, போலீஸை மதிக்காமல் வேகமாக கடந்து சென்றுள்ளது. உடனடியாக அவர்களை பூமிநாதன் பைக்கில் பின் தொடர்ந்திருக்கிறார்..
ஆடு திருட்டு: ஆடு திருட்டு கும்பலை 8 கிலோ மீட்டர் தூரம் சரியாக பின்தொடர்ந்த பூமிநாதன், புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளபட்டி எனும் ஊரில், ஒரு பைக்கில் சென்ற திருடர்களை பிடித்துள்ளார். இதையடுத்து, அந்த கும்பல் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செயத்னர்.
அப்போது ஒரு இடத்தில் திருடர்கள் மின்னல் வேகத்தில் சென்றதும் அவர்களை பிடிக்க பூமிநாதன் துரத்துவதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் மறுநாளே கைது செய்தனர்.
பூமிநாதன்: இதற்கு பிறகு, பூமிநாதன் ரோந்து செய்த இடத்தில் பதிவாகியிருந்த செல்போன் சிக்னல் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் இருந்தது ஆய்வு செய்யப்பட்டது.. பிறகு, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இதையடுத்து, தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தில் கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
இதில், மணிகண்டன் மற்றும் 2 சிறார்கள் கைதானார்கள்.. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மணிகண்டன் சிறையிலும், மற்ற 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.. மணிகண்டன் மீது ஏற்கனவே வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.. இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மிகுந்த பரபரப்பு: ஆனால், 29ம் தேதி அதாவது இன்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.. எனவே, இன்றைய தினம் இந்த கொலை வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்போவதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆடு திருடர்களால் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் இருவர் மீதான வழக்கு இளைஞர் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications