புதுக்கோட்டையில் அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. வைரலான வீடியோ! தலைமை ஆசிரியை விளக்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே அரசு பள்ளி மாணவர்களை, பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியை விளக்கம் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள தேக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உதவி ஆசிரியராக தினேஷ் ராஜா என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆம் தேதி, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து புகாரின் பெயரில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது குறித்து நமணசமுத்திரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலா விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலா விளக்கம் அளித்துள்ளார். "கடந்த 3 ஆண்டுகளாக பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய தனியாக நமணசமுத்திரம் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டு இருந்ததார். நமணசமுத்திரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வீரம்மாள் மற்றும் குறிச்சிப்பட்டி சுதா ஆகிய இருவரும் காலை உணவு திட்டம் சமையல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வீரம்மாள், சுதாவை காலை உணவு சமையல் செய்ய வர வேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து, தலைமை ஆசிரியரான என்னிடம் கேட்காமல் அவரை வேலைக்கு வர வேண்டாம் என ஏன் கூறினீர்கள் என்று நான் கேட்டேன்.
அப்படி கேட்ட காரணத்திற்காக கழிவறை சுத்தம் செய்ய வரும் ராணி என்ற பெண் பள்ளிக்கு வருவதற்கு முன்பாகவே, வீரம்மாள் வேண்டுமென்றே என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் பள்ளியில் படிக்கும் அவரது மகன் மற்றும் ஒரு சில மாணவர்களை சேர்த்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோவாக படம் பிடித்து அனுப்பி சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளார். நான் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications