சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
புதுக்கோட்டை: எத்தனையோ முறை சொல்லியும்கூட, தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, வேங்கைவயல் மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.. தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்தது மிகப்பெரிய அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்திவிட்டது.
கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள சில கிராமங்களில், தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள்.. தங்கள் பகுதியில் நடக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க சொல்லி, பலமுறை அதிகாரிகளிடம் மனு தந்துவிட்டார்களாம். ஆனால், யாருமே கோரிக்கையை நிறைவேற்றவில்லையாம்.

இதன்காரணமாக இன்று தேர்தலை புறக்கணித்து, வாக்களிக்கவும் செல்லவில்லை. ஒருத்தர்கூட ஓட்டப்போட வராமல், நிறைய வாக்குச்சாவடிகள் காற்றுவாங்கி கொண்டிருந்தன.
வேங்கைவயல்: அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் கிராமமும் ஒன்றாகும்... தமிழகத்தையே உலுக்கிப்போட்டது இந்த வேங்கைவயல் கிராமம்.. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, குடிக்கிற தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது... பல கட்ட விசாரணைகளும் நடந்தாகிவிட்டது.. ஆனால், இன்னும் ஒருத்தர்கூட இது தொடர்பாக பிடிபடவில்லை.ஒருபக்கம் சிபிசிஐடி விசாரித்து கொண்டிருக்கிறது.. இன்னொருபக்கம் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம், இந்தச் சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லையாம்.. அப்படியிருந்தும்கூட, இந்த வழக்கு இதுவரை முடிவுக்கு வரவில்லை. இப்படி ஒரு கேவலமான காரியத்தை செய்தது யார் என்றும் தெரியவில்லை.
புறக்கணிப்பு: அதனால்தான், மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வேங்கைவயல் மற்றும் இறையூர் ஆகிய 2 கிராம மக்களும் கோரிக்கை விடுத்ததுடன், தேர்தல் புறக்கணிப்பையும் அதிரடியாக அறிவித்தனர்.
காலையிலிருந்தே வேங்கைவயல் கிராம மக்கள் யாருமே வாக்களிக்க போகவில்லை.. இத்தனைக்கும் இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, பாதுகாப்புக்காக துணை ராணுவம் காலையிலேயே இறங்கிவிட்டது..
ஆதங்க கேள்வி: 549 வாக்காளர்கள் இருந்தும்கூட, யாரும் வாக்களிக்கவில்லை... மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பீர்கள்? என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் வேங்கைவயல் மக்கள்...!
வாக்குச்சாவடிக்கு மக்கள் யாருமே ஓட்டு போட வரவில்லை என்ற விஷயத்தை கேள்விப்பட்டதுமே, அதிகாரிகள் 2 கிராமங்களுக்கும் பதறியடித்து ஓடினார்கள்.. 2 கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி நேரில் வந்தும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) மா. சின்னதுரை ஆகியோர் அங்குள்ள பிரமுகர்களுடன் தொலைபேசி மூலமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..
குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் அக்கிராம மக்களுக்கு உறுதி தந்தார்கள்.
சாயங்காலம்: அதற்கு பிறகுதான், வேங்கைவயல், இறையூர் கிராம மக்கள் ஓட்டுப்போடுவதற்காக, பூத் நோக்கி சென்றார்கள்.. நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளையும் பதிவு செய்தார்கள்.. அதாவது, சாயங்காலம் வரைக்கும் யாருமே வாக்களிக்க வராமலேயே இருந்திருக்கிறார்கள்.. அதிகாரிகள் உறுதி தந்த பிறகுதான் ஓட்டுப்போட கிளம்பி சென்றார்கள்.சிறிதுநேரம் சிறப்பு நேரம் வழங்கப்பட்டு இங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அதிகாரிகளும் தெரிவித்தார்கள்.. மேலும், வேங்கைவயல் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குப்பதிவு: இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும், மாநில அரசும் எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வந்தது.. எத்தனையோ சலுகைகளையும் பொதுமக்களுக்காக அறிவித்தது.. எத்தனையோ வசதிகளையும் செய்து தந்தது.. ஆனாலும், வேங்கைவயல் மக்களின் இந்த இறுக்கமான "மனஉறுதியானது", தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை இன்றைய தினம் உண்டுபண்ணிவிட்டது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications