புதுக்கோட்டை தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்.. யார் அந்த 3 பேர்.. துப்பு துலங்கிய தனிப்படை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸாருக்கு முக்கிய துப்பு துலங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ஆப்டிகல்ஸ் கடை நடத்தி வந்தார். உடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவரது மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகிறார்கள்.

அறந்தாங்கி வீடு
இதனால் அறந்தாங்கி வீட்டில் நிஜாமும் ஆயிஷாவும் மட்டும் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு நிஜாம் வீட்டின் முன் நின்று கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் 3 பேர் குதித்தனர்.

திடுக்கிட்ட நிஜாம்
அவர்களை கண்டு திடுக்கிட்ட நிஜாம், அவர்களை தடுக்க முயற்சித்தார். அப்போது 3 பேரும் சேர்ந்து நிஜாமின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். இதில் நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அந்த கும்பல், ஆயிஷாவை கட்டிப்போட்டுவிட்டனர்

100 சவரன் கொள்ளை
பின்னர் பீரோவை திறந்து 100 சவரன் நகை மற்றும் ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நிஜாமின் உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து நிஜாமின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Recommended Video

அந்த 3 பேர் யார்?
இதுகுறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகிறார்கள். இந்த விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் நிஜாமின் தோட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் வந்து தங்கி இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் வேலை பார்த்தனர். ஆனால் கொலை சம்பவம் நிகழ்ந்த நாள் முதல் அவர்கள் மூவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மூவரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications