மொத்த போலீஸ் படையே கலங்கி நிற்க.. இன்ஸ்பெக்டர் உடலை.. சுமந்து சென்ற எஸ்.பி வந்திதா.. அந்த நொடி!
புதுக்கோட்டை: வேகத் தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளர் பிரியாவிற்கு நேற்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக ஸ்பீட் பிரேக்கர் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டையில் ஸ்பீட் பிரேக்கரால் விபத்துக்குள்ளானதில் பெண் காவல் ஆய்வாளர் பிரியா என்பவர் உயிரிழந்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரியா (48), புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே விபத்தில் சிக்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பிரியா தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டியில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இறுதி சடங்கு; இந்த நிலையில் வேகத் தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளர் பிரியாவிற்கு நேற்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்த சம்பவம் காவல் துறையை உலுக்கி உள்ளது.
வேகத் தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளர் பிரியாவின் உடலை இடுகாட்டுக்கு மாவட்ட எஸ்.பி, வந்திதா பாண்டே உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சுமந்து வந்தனர். இந்த காட்சி காண்போரை கலங்க வைத்தது.
என்ன நடந்தது?: புதுக்கோட்டை பஸ் ஸ்டான்ட் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் சென்ற போது எவ்வித எச்சரிக்கை குறியீடும் இல்லாத வேகத்தடையில் தடுமாறி விழுந்து படுகாயமடைந்த திருவரம்பூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிரியா படுகாயங்களுடன் உயிருக்கு போராடி இருக்கிறார். கடும் போராட்டத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி பலியானார்.
ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூரில் பணியை முடித்துக் கொண்டு புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்றுள்ளார். அவரது கணவர் ப்ரியாவை அங்கிருந்து அழைத்துச் சென்றார்,. இருவரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். . அவர்கள் வீட்டிற்குச் செல்லும் சாலையில் பைக் சென்று கொண்டிருந்தபோது, புதிதாக போடப்பட்டிருந்த ஸ்பீட் பிரேக்கரைக் கடக்க வேண்டியிருந்தது. இரவு நேரத்தில் கண்ணுக்கு தெரியாததால், பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் விழுந்த பிரியா தலையில் காயம் ஏற்பட்டது.
முதலில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எம்ஜிஎம்ஜிஹெச் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் புதுக்கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அவரது குழுவினர் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவரது உடலை எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது












Click it and Unblock the Notifications