Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயநாடு நிலச்சரிவு... தேநீர் மொய் விருந்து நடத்திய டீக்கடைக்காரர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் தேநீர் மொய் விருந்து நடத்தி வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்தனர்.

Wayanad Landslide

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு மாவட்ட மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது இந்த நிலச்சரிவு சம்பவம். நூற்றுக்கணக்கானோர் தங்களது உயிரையும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். பலர் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் மொய் விருந்து நடத்திய நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏழ்மை நிலையில் கஷ்டப்படும் குடும்பத்துக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த மொய் விருந்து எனும் வழக்கம். பேராவூரணி முதல் புதுக்கோட்டை வரையிலான பகுதி மக்களிடையே இந்த மொய் விருந்து மிகவும் பிரபலமானதாகும். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வம்பன் நான்கு சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் சிவகுமார். சிறுவயது முதலே டீக்கடைகளில் எடுபிடி வேலைகளுக்குச் சேர்ந்து தற்போது பகவான் டீ ஸ்டால் என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக மொய் விருந்து, ஏழைகளுக்கு உதவுவதற்காக மொய் விருந்து, இலங்கை தமிழர்களுக்காக மொய் விருந்து என இவர் அடிக்கடி தேநீர் மொய் விருந்து நடத்தி பொதுமக்களுக்கு உதவி வருகிறார். அந்த வகையில், கேரள மாநிலத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தற்போது மொய் விருந்து நடத்தி வருகிறார்.

இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், கேரளத்தில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். எனவே, நிதியுதவி செய்ய வேண்டும் என்று எண்ணி தேநீர் மொய் விருந்து நடத்தி வருகிறேன். ஏராளமானோர் வந்து டீ சாப்பிட்டுவிட்டு நிவாரண உதவி அளிக்கின்றனர். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த காலங்களில் மொய் விருந்து வைத்தபோது 15 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை பொதுமக்கள் மொய் செய்துள்ளனர். இப்போது எப்படி என்று தெரியவில்லை. மாலையில்தான் கணக்கு தெரியவரும். குறைந்தபட்ச தொகையாக இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்படும். அதிகபட்ச தொகை வரும்பட்சத்தில் வயநாட்டிற்கே நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கு நிவாரண உதவியை வழங்கலாம் என்று இருக்கிறோம்.

இதுகுறித்து, வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், சிவகுமார் பரந்த மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மொய் விருந்து நடத்தியுள்ளார். இவரது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்றார். இதேபோல, வாடிக்கையாளர்கள் பலரும் தேநீர் அருந்தி மொய் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி என்ற சிறுவன் 5 ஆயிரம் ரூபாய் மொய் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+