பச்ச மண்ணு..15 வயசு தான்! மிருகமாக மாறிய காமராஜ்! கோர்ட் வாசலில் அழுது புரண்டு..இப்போ என்ன பிரயோஜனம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த 2021ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காமராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் கதறி அழுதார்.
இந்தியாவில் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெண்கள் குறிப்பாக 18 வயது கீழ் உள்ள சிறுமிகள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதும் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

பாலியல் பலாத்காரம்
அதே நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க ஃபார்ஸ்ட் ட்ராக், மற்றும் மகிளா நீதிமன்றங்கள் உள்ளன என்பது சற்றே ஆறுதல் விஷயம். இதன் மூலம் பாலியல் குற்றவாளிகள் குறைந்த கால கட்டத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உடனுக்குடன் தண்டனையும் அறிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த 2021ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காமராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் கதறி அழுதார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குருச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடைய 15 வயது மகள் தனியா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நர்சிங் மாணவி
இந்த நிலையில் கடந்த 7.11.2021 அன்று அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த காமராஜ் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் விசாரணை
இது தொடர்பாக அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே அவரது பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை
வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா 15 வயது சிறுமியை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறி ஆயுள் தண்டனையும் இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். தண்டனை அளித்த பின்னர் குற்றவாளி காமராஜ் கதறி அழுத சம்பவம் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications